Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2025ன் கடைசி ‘மன் கி பாத்’.. ஆபரேஷன் சிந்தூரை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி பெருமிதம்!

2025’s last ‘Mann Ki Baat’: ‘2026 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. இன்று நான் உங்களுடன் பேசும்போது, ​​என் மனம் இந்த முழு ஆண்டையும் திரும்பிப் பார்க்கிறது. பல காட்சிகள், பல விவாதங்கள் மற்றும் பல சாதனைகள் தேசத்தை ஒன்றிணைத்துள்ளன,’ என்று அவர் கூறினார்.

2025ன் கடைசி ‘மன் கி பாத்’.. ஆபரேஷன் சிந்தூரை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி பெருமிதம்!
பிரதமர் மோடி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Dec 2025 14:07 PM IST

‘ஆபரேஷன் சிந்துர்’ ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையின் சின்னமாக மாறியது என பிரதமர் மோடி பெருமிதம் கூறியுள்ளார். அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் பிரதமர் மோடி உரையாடி வருகிறார். அதன்படி, 129வது மற்றும் 2025ம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய இந்தியா தனது பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளாது என்பதை கற்றுக்கொண்டுள்ளது என்றார். மேலும், 2025ஆம் ஆண்டில் நிகழ்ந்த பல்வேறு சிறப்பான தருணங்களையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Year Ender 2025: அமேசான் முதல் ஃபிளிப்கார்ட் வரை… இ-காமர்ஸ் துறையில் அசூர வளர்ச்சி – காரணம் என்ன?

இன்றைய பாரதம் தனது பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளாது என்பதை உலகம் தெளிவாகக் கண்டதாக கூறிய அவர், ‘ஆபரேஷன் சிந்துர்’ திட்டத்தின் போது, ​​அன்னை பாரதத்தின் மீதான அன்பையும், பக்தியையும் காட்டும் புகைப்படங்கள் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வெளிவந்தன என்றார். மேலும், ‘2026 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. இன்று நான் உங்களுடன் பேசும்போது, ​​என் மனம் இந்த முழு ஆண்டையும் திரும்பிப் பார்க்கிறது. பல காட்சிகள், பல விவாதங்கள் மற்றும் பல சாதனைகள் தேசத்தை ஒன்றிணைத்துள்ளன,’ என்று அவர் கூறினார்.

ஆபரேஷன் சிந்தூரை நினைவுகூர்ந்த மோடி:

தொடர்ந்து, பேசிய அவர், தேசிய பாதுகாப்பு முதல் விளையாட்டு வரை, அறிவியல் ஆய்வகங்கள் முதல் முக்கிய உலகளாவிய தளங்கள் வரை, இந்தியா எல்லா இடங்களிலும் தனது வலுவான முத்திரையைப் பதித்துள்ளது. இந்த ஆண்டு, ‘ஆபரேஷன் சிந்துர்’ ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையின் சின்னமாக மாறியது. இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளாது என்பதை உலகம் கண்டது” என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு நாடு கண்ட மாபெரும் பாய்ச்சல்கள் குறித்துப் பேசிய அவர், “சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியர் ஆனார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான பல முன்முயற்சிகளும் 2025 ஆம் ஆண்டில் முக்கியத்துவம் பெற்றன. பாரதத்தில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை இப்போது 30-ஐத் தாண்டியுள்ளது.

இதையும் படிங்க : January 2026 : கிரெடிட் ஸ்டோர் முதல் ஆதார் – பான் இணைப்பு வரை.. ஜனவரி மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

மகா கும்பமேளாவை நினைவுகூர்ந்த மோடி:

பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பத்தின் தருணங்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, “நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பாரதத்தின் தனித்துவமான பாரம்பரியம் அனைத்தும் 2025 ஆம் ஆண்டில் ஒன்றாகக் காணப்பட்டன. ஆண்டின் தொடக்கத்தில் பிரயாக்ராஜ் மகா கும்பம் ஏற்பாடு செய்யப்பட்டது முழு உலகையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆண்டின் இறுதியில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கொடியேற்றும் விழா ஒவ்வொரு இந்தியனையும் பெருமையில் ஆழ்த்தியது,” என்றார்.

தமிழ் மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு:

உலகின் பழமையான மொழியான தமிழ் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புதிய ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். வாரணாசியைச் சேர்ந்தவர்கள் தமிழ் பேசும் ஆடியோவையும் பகிர்ந்தார்.