வளமான கடல்சார் பாரம்பரியத்தை பிரதிபளிக்கும் INSV கவுண்டின்யா – பிரதமர் மோடி பெருமிதம்..
INSV Kaundinya: இந்தக் கப்பல் பண்டைய தையல் நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. இதற்கு இயந்திரமோ அல்லது நவீன உந்துவிசை அமைப்புகளோ இல்லை. இது காற்று மற்றும் பிற உந்துவிசை வழிகளை நம்பியுள்ளது. ஐ.என்.எஸ்.வி கவுண்டினியா மூலம் நாடு கடந்த காலத்தை மீட்டெடுத்துள்ளது.
டிசம்பர் 30, 2025: போர்பந்தரில் இருந்து ஓமான் நாட்டின் மஸ்கட் நகரத்தை நோக்கி தனது முதல் பயணத்தைத் தொடங்கிய INSV கவுண்டின்யா கப்பலை உருவாக்கிய வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கப்பல் கட்டுபவர்கள் மற்றும் இந்திய கடற்படையினரின் அர்ப்பணிப்பான முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். INSV கவுண்டின்யா என்பது இந்தியாவின் பழமையான கப்பல் (Stitched-Ship) கட்டுமான முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவும், இது இந்தியாவின் வளமான கடல் மரபுகளை வெளிப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வளமான கடல்சார் பாரம்பரியத்தை பிரதிபளிக்கும் கப்பல் – பிரதமர்:
Wonderful to see that INSV Kaundinya is embarking on her maiden voyage from Porbandar to Muscat, Oman. Built using the ancient Indian stitched-ship technique, this ship highlights India’s rich maritime traditions. I congratulate the designers, artisans, shipbuilders and the… pic.twitter.com/bVfOF4WCVm
— Narendra Modi (@narendramodi) December 29, 2025
அதில், “ “ஐஎன்எஸ்வி கவுண்டியா போர்பந்தரிலிருந்து ஓமனின் மஸ்கட் வரை தனது முதல் பயணத்தை மேற்கொள்வதைப் பார்ப்பது ஒரு அழகான காட்சி. பண்டைய நெசவு நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்தக் கப்பல், இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த தனித்துவமான கப்பலை உயிர்ப்பித்ததற்காக வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள், கப்பல் கட்டுபவர்கள் மற்றும் இந்திய கடற்படைக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வளைகுடா பிராந்தியத்துடனும் அதற்கு அப்பாலும் நமது வரலாற்று உறவுகளை மீண்டும் வளர்க்கும் பயணத்தில் நாம் ஈடுபடும்போது, குழுவினருக்கு பாதுகாப்பான மற்றும் மறக்கமுடியாத பயணம் அமைய வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: திடீரென ஊருக்குள் புகுந்த புலி.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய மக்கள்.. மபியில் பரபரப்பு சம்பவம்!
INSV கவுண்டினியாவின் சிறப்புகள் என்ன?
இந்தக் கப்பல் பண்டைய தையல் நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. இதற்கு இயந்திரமோ அல்லது நவீன உந்துவிசை அமைப்புகளோ இல்லை. இது காற்று மற்றும் பிற உந்துவிசை வழிகளை நம்பியுள்ளது. ஐ.என்.எஸ்.வி கவுண்டினியா மூலம் நாடு கடந்த காலத்தை மீட்டெடுத்துள்ளது. இங்கு பயன்படுத்தப்படும் கட்டுமான நுட்பங்கள் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது.
அஜந்தா குகைகளில் உள்ள சுவரோவியங்கள் மற்றும் பண்டைய இந்திய நூல்களில் உள்ள விளக்கங்களால் இந்தக் கப்பலின் வடிவமைப்பு ஈர்க்கப்பட்டது. பின்னர் கடற்படை அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி வடிவமைப்பை மறுகட்டமைத்தது. ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் ஆதரவுடன் ஹைட்ரோடைனமிக் சோதனை மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
INSV கவுண்டினியா தோராயமாக 19.6 மீட்டர் நீளமும் 6.5 மீட்டர் அகலமும் கொண்டது. கலாச்சார அமைச்சகம், இந்திய கடற்படை மற்றும் ஹோடி இன்னோவேஷன்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த திட்டம் ஜூலை 2023 இல் தொடங்கப்பட்டது.