மாஞ்சா நூலால் வந்த வினை…கழுத்தில் 10 தையல்…ஆபத்தான நிலையில் பாதிரியார்!
Manja Thread Cuts Priest Neck: மத்திய பிரதேசம் மாநிலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த பாதிரியாரின் கழுத்தில் காத்தாடியின் மாஞ்சா நூல் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் அவருக்கு 10 தையல்கள் போடப்பட்டுள்ளன. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைனி மாவட்டத்தில் பாதிரியார் வினய் திவாரி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு பறந்து கொண்டிருந்த சீன காத்தாடியின் மாஞ்சா நூல் எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் சிக்கி அறுத்தது. இதில், அவரது கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு கழுத்துப் பகுதியில் 10 தையல்கள் போடப்பட்டுள்ளன. இது தொடர்பாக, மருத்துவர் ஆஷு வர்மா கூறுகையில், பாதிரியார் வினய் திவாரிக்கு கழுத்துப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. இதற்காக சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவரது கழுத்தில் இருந்த காத்தாடியின் நூலை கவனமாக அகற்றி 10 தையல்கள் போட்டுள்ளோம்.
மாஞ்சா நூல் காரணமாக நிகழும் சம்பவம்
தற்போது, பாதிரியார் நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மகாகல் காவல் நிலைய விசாரணை அதிகாரி எஸ். எல். கணோஜே கூறுகையில், பாதிரியார் வினய் திவாரிக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் உள்ளார். அந்த காத்தாடி பறக்கவிட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மைஞ்சா என்று அழைக்கப்படும் சீன காத்தாடி நூல் பயன்பாடு காரணமாக இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மேலும் படிக்க: ஆந்திராவில் மிகப்பெரிய எரிவாயு கசிவு – தீ விபத்து காரணமாக புகை மண்டலமாக மாறிய கிராமம் – அதிர்ச்சி சம்பவம்




மகர சங்கராந்தி பண்டிகை நாளில்…
இதனால், மகர சங்கராந்தி பண்டிகைக்கு முன்னதாக காத்தாடி விற்பனை உச்சத்தில் இருக்கும். காத்தாடி சரத்தின் விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாட்டிற்கு உஜ்ஜைன் மாவட்ட நிர்வாகம் முழுமையாக தடை விதித்துள்ளது. இந்த மாவட்டம் மட்டுமின்றி மத்திய பிரதேசம் மாநிலம் முழுவதும் காத்தாடி மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சீன மாஞ்சா நூலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மாஞ்சா நூல் எப்படி செய்யப்படுகிறது
மகர சங்கராந்தி பண்டிகையின் போது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுவது அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மாஞ்சா நூலால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நூலானது வஜ்ரம் அல்லது சவ்வரிசி மூலம் செய்யப்படுகிறது. பின்னர், கண்ணாடி துகள்கள் சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. காத்தாடி போட்டியின் போது, இந்த நூலின் மூலம் மற்றொரு காத்தாடியின் நூலை அறுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே உயிரிழப்புகள் மற்றும் பலத்த காயங்கள் ஏற்படுவதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: யூடியூபர் போர்வையில் சூதாட்டம்.. பல சொகுசு கார்கள்.. கோடிக்கணக்கில் சொத்து என மிரள வைத்த இளைஞர்!