சொன்னப்டி மைலேஜ் கொடுக்காத மின்சார ஆட்டோ.. ஷோரூம் வாசலில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்!
Man Set Fire On Electric Auto | ராஜஸ்தானை சேர்ந்த மோகன் சோலங்கி என்ற நபர் மின்சார ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், அந்த ஆட்டோ கூறப்பட்டதை போல மைலேஜ் கொடுக்காததால் கடும் ஆத்திரமடைந்த அவர் ஷோரூம் வாசலில் வைத்து அதனை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
ஜெய்ப்பூர், டிசம்பர் 31 : ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் சோலங்கி. இவர் 2024 ஆம் ஆண்டு ரூ.5 லட்சத்திற்கு மின்சார அட்டோ (Electric Auto) ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கு முன்பணமாக அவர் ரூ.70 ஆயிரம் செலுத்தியுள்ளார். மிச்ச பணத்தை மாதம் மாதம் தவணை முறையில் ரூ.10,655 செலுத்தி வந்துள்ளார். அந்த மின்சார ஆட்டோ ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 180 கிலோ மீட்டர் வரை செல்லும் என்று ஷோரூமில் கூறப்பட்ட நிலையில், அதனை நம்பி அவர் ஆட்டோவை வாங்கியுள்ளார்.
ஆட்டோ குறைவான மைலேஜ் கொடுத்ததால் ஆத்திரம்
மின்சார ஆட்டோவை மோகன் வாங்கிய நிலையில், தொடக்கத்தில் ஷோரூமில் கூறியதை போலவே ஒருமுறை சார்ஜ் செய்தால் ஆட்டோ 174 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுள்ளது. ஆனால், அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. காரணம், ஒருசில மாதங்களிலேயே அந்த ஆட்டோவின் மைலேஜ் குறைய தொடங்கியுள்ளது. அதாவது தொடக்கத்தில் 174 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜ் கொடுத்த ஆட்டோ படிப்படியாக குறைந்து 70 முதல் 74 கிலோ மீட்டர்கள் மட்டுமே மைலேஜ் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க : வளமான கடல்சார் பாரம்பரியத்தை பிரதிபளிக்கும் INSV கவுண்டின்யா – பிரதமர் மோடி பெருமிதம்.
உரிய விளக்கம் அளிக்காமல் இருந்த ஷோரூம்
ஆட்டோ படிப்படியாக மைலேஜ் குறைந்து வந்ததை உணர்ந்த மோகன் அது குறித்து தான் ஆட்டோ வாங்கிய அந்த ஷோரூமில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகார் தொடர்பாக அந்த ஷோரூமில் எந்த வித விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும் அவரது அட்டோவில் ஏற்பட்ட சிக்கலையும் ஷோரூம் சரிசெய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மோகன் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க : திருமணம் செய்துக்கொள்வதாக இளம் பெண்ணை ஏமாற்றி ரூ.1 கோடி பண பறித்த நபர்.. விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்கள்
ஷோரூம் வாசலில் வைத்து ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்
ஆட்டோவின் மைலேஜ் குறைவானது, தனது புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாதது ஆகிவை குறித்து கடும் ஆத்திரத்திற்கு உள்ளான மோகன் அதிர்ச்சியூட்டும் செயலை செய்துள்ளார். அதாவது தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு ஷோரூம் சென்ற அவர், அங்கு ஷோரூம் வாசலில் வைத்து அட்டோவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் ஆட்டோ தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இது தொடர்பாக மோகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.