டிவி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 6 வயது சிறுவன் குளத்தில் சடலமாக மீட்பு!
6 Years Old Boy Found Dead In Pond | கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியில் அண்ணனுடன் சண்டைபோட்டு வீட்டை விட்டு வெளியேறிய 6 வயது சிறுவன் அருகில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம், டிசம்பர் 29 : கேரள (Kerala) மாநிலம், பாலக்காடு (Palakkad) மாவட்டம், எர்மன்மேடு பகுதியை சேர்ந்தவர் முகமது அனீஸ். இவரது மனைவி துஹிடா. இந்த தம்பதிக்கு ரயன் மற்றும் சுஹன் (வயது 6) என இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். முகமது அனீஸ் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், துஹிடா அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், துஹிடா தனது இரண்டு மகன்களையும், குடும்பத்தையும் கவனித்து வந்துள்ளார்.
டிவி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டை – வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்
இந்த நிலையில் டிசம்பர் 27, 2025 அன்று சிறுவர்கள் இருவரும் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது துஹிடா மகன்களை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். இதற்கிடையே டிவி பார்ப்பதில் அண்ணன் – தம்பி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அண்ணனுடன் கோபித்துக்கொண்டு சுஹன் அழுதுக்கொண்டே வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில், மாலையில் வீடு திரும்பிய துஹிடா மூத்த மகன் ரயனிடம் சுஹன் எங்கே என கேட்டுள்ளார்.
இதையும் படிங்க : வெளிநாட்டு போதைப்பொருள்.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரரை தேடும் போலீஸ்.. நடந்தது என்ன?
கிராமத்தில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்
தம்பி எங்கே என தாய் கேட்ட நிலையில், நடந்த சம்பம் குறித்து ரயன் கூறியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளனா துஹிடா உடனே தனது மகனை வீட்டின் அருகே உள்ள பகுதிகளில் தேடியுள்ளார். ஆனால், எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில், அவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : “செல்போன், அரை கால்சட்டைக்கு தடை”.. இளைஞர்கள், சிறுவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா?.. எங்கு தெரியுமா?
தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்
போலீசாரின் பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் அந்த கிராமத்தில் உள்ள குளத்தில் இருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுவனின் உடலை மீட்ட போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அண்ணனுடன் சண்டையிட்ட சிறுவன் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது சிறுவனின் மரணத்திற்கு பின்னால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.