திருமணம் செய்துக்கொள்வதாக இளம் பெண்ணை ஏமாற்றி ரூ.1 கோடி பண பறித்த நபர்.. விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்கள்!
Man Cheated Young Woman With Marriage Promise | கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றி ரூ.1 கோடி பணம் பறித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
பெங்களூரு, டிசம்பர் 30 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு (Bengaluru) பாகலகுண்டே காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் 27 வயதான சுபான்ஷி சுக்லா என்ற நபரும் வசித்து வருகிறார். அந்த இளம் பெண்ணின் தங்கைக்கும், சுபான்ஷிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் அடிக்கடி இளம் பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதன் மூலம் சிறுமியின் குடும்பத்தாரிடம் அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தங்கையின் நண்பருடன் காதலில் விழுந்த இளம் பெண்
சுபான்ஷியிடம் சிறுமியின் குடும்பத்தார் நன்றாக பழக தொடங்கிய நிலையில், இளம் பெண்ணுக்கும் அவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில், தனக்கு மும்பையில் வேலை கிடைத்திருப்பதாக கூறி இளம் பெண்ணை சுபான்ஷி அங்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள ஒரு குடியிருப்பில் அவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலே கணவன் – மனைவியை போல வாழ தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : டிவி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 6 வயது சிறுவன் குளத்தில் சடலமாக மீட்பு!
ஏற்கனவே திருமணமானது தெரிய வந்ததால் அதிர்ச்சி
அவர்கள் இருவரும் சில நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் தான் சுபான்ஷிக்கு ஏற்கனவே திருமணமானது அந்த இளம் பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. அது குறித்து அந்த இளம் பெண் கேட்டபோது எனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இதனை கேட்டு இளம் பெண் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே சண்டையும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. பரபரப்பு சம்பவம்!
விசாரணையில் தெரிய வந்த பரபரப்பு தகவல்கள்
இந்த விவகாரம் தொடர்பாக இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சுபான்ஷியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். அதாவது இளம் பெண்ணை காதலித்து அவருடன் ஒன்றாக வசிப்பதற்கு முன்னதாகவே சுபான்ஷி இளம் பெண்ணின் தாங்கயை பாலியல் வன்கொடுமை செய்ததும், அது குறித்து வெளியே சொன்னால் குடும்பத்தை கொலை செய்துவிடுவேன் என்று அவர் மிரட்டியதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. பரபரப்பு சம்பவம்!
இதேபோல திருமணம் செய்துக்கொள்வதாக கூறி இளம் பெண்ணுடனுன் அவர் பாலியல் உறவில் இருந்துள்ளார். அதுமட்டுமன்றி, அந்த இளம் பெண்ணிடம் இருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் நகைகள் மற்றும் பணத்தையும் அவர் பெற்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மேலும் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.