மும்பையில் பின்நோக்கி இயங்கிய பேருந்து மோதி 4 பேர் பலி.. 9 பேர் படுகாயம்!
Bus Ran In Reverse Hit Public In Mumbai | மும்பையில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பேருந்து ஒன்று பின்நோக்கி இயங்க தொடங்கியுள்ளது. இந்த பேருந்து மோதி 4 பேர் பலியான நிலையில், 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை, டிசம்பர் 31 : மும்பை (Mumbai) பாண்டுப்பில் உள்ள ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏராளமான பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அந்த பேருந்து நிறுத்தத்திற்கு ஒரு மாநகர பேருந்து வந்துள்ளது. அந்த பேருந்தை சந்தோஷ் ரமேஷ் சாவந்த என்பவர் ஓட்டி வந்த நிலையில், பகவான் பாக் கரே என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்து, பேருந்து நிறுத்தத்திற்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
பின்நோக்கி இயங்கிய பேருந்து 13 பேர் மீது மோதியது
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பின்நோக்கி செல்ல தொடங்கியுள்ளது. அவ்வாறு பேருந்து பின்நோக்கி சென்ற நிலையில், அது சாலையில் சென்ற பொதுமக்கள் மீது மோதியுள்ளது. அதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். பின்னர் அந்த பேருந்து அங்கிருந்த மின்கம்பம் ஒன்றின் மீது மோதி நின்றுள்ளது. இந்த நிலையில், பேருந்து மோதி காயமடைந்து கிடந்த பொதுமக்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : நெட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு…நுழைவுச்சீட்டு வெளியீடு
சிகிச்சை பெற்று வரும் 9 பேர்
இந்த விபத்து சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்துள்ள 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ஓலா-உபர், ராபிடோக்கு இணையாக…நாடு முழுவதும் களமிறங்கும் பாரத் டாக்ஸி…பல்வேறு முக்கிய வசதிகள்
பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
இந்த விபத்து சம்பவம் குறித்து மராட்டிய மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விபத்துக்குள்ளான பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநர் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.