Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மத்திய பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்? – வெளியான சூப்பர் தகவல்

Union Budget 2025 – 26 : மத்திய அரசின் அறிவிப்பின்படி, 2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1, 2026  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்பாக, பொருளாதார ஆய்வு அறிக்கை ஜனவரி 29ஆம் தேதி வெளியிடப்படும்.

மத்திய பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்? – வெளியான சூப்பர் தகவல்
மத்திய பட்ஜெட் 2026
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Jan 2026 20:50 PM IST

புதுடெல்லி, ஜனவரி 9 : மத்திய அரசின் அறிவிப்பின்படி, 2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் (Budget) வரும் பிப்ரவரி 1, 2026  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதற்கு முன்பாக, பொருளாதார ஆய்வு அறிக்கை ஜனவரி 29,  2026 அன்று வெளியிடப்படும். இதனுடன் தொடர்புடைய நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் விவாதங்கள், மானிய கோரிக்கைகள் மற்றும் முக்கிய பொருளாதார கொள்கைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழில்துறையினர் மற்றும் வரி செலுத்துபவர்கள் அனைவரும் இந்த பட்ஜெட்டை பெரும் எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி அறிவிப்பு

மத்திய அரசின் அறிவிப்பின்படி, 2025–26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு முன்னோடியாகக் கருதப்படும் பொருளாதார ஆய்வு அறிக்கை (Economic Survey), ஜனவரி 29, 2026 அன்று முதன்மை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் மூலம் வெளியிடப்பட உள்ளது.

இதையும் படிக்க : சாலை விபத்துகளை தடுக்க மத்திய அரசின் மாஸ்டர் பிளான்.. வாகனங்களில் இனி V2V தொழில்நுட்பம் கட்டாயம்!

இதனுடன் தொடர்புடைய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 2, 2026 அன்று வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடருக்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ஒப்புதலை வழங்கியதுடன், கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அவர் உரையாற்ற உள்ளார்.

பட்ஜெட் குறித்து வெளியான அறிவிப்பு

 

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் பிப்ரவரி 13, 2026 அன்றுடன் நிறைவடையும் நிலையில், இரண்டாவது கட்டம் மார்ச் 9, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 2, 2026 அன்று வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மத்திய பட்ஜெட் குறித்த விரிவான விவாதங்கள், மானிய கோரிக்கைகள் மற்றும் முக்கிய பொருளாதார கொள்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்படவுள்ளன.

இதையும் படிக்க : சென்னைக்கு ஷாக்.. கடலில் மூழ்கும் அபாயம் என வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.. முழு விவரம்!

மேலும் இந்த பட்ஜெட்டில் வரிவிதிப்பு, வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இந்த பட்ஜெட் முக்கிய தீர்மானங்களை கொண்டிருக்கும் என்பதால், பொதுமக்கள் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது மக்களுக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.