Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னைக்கு ஷாக்.. கடலில் மூழ்கும் அபாயம் என வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.. முழு விவரம்!

World Places Sinking Into The Sea: இந்தியா உள்பட உலகத்தின் பெரும்பாலான பகுதிகள் கடலில் மூழ்கி வருவதாக சிங்கப்பூரில் உள்ள நான்யாங் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதில், தமிழகத்தில் சென்னையில் உள்ள பகுதிகளும் இடம் பெற்று உள்ளன.

சென்னைக்கு ஷாக்.. கடலில் மூழ்கும் அபாயம் என வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.. முழு விவரம்!
கடலில் மூழ்கும் இந்திய நகரங்கள்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 09 Jan 2026 11:06 AM IST

உலகில் உள்ள பிரபலமான நகரங்கள் கடலில் மூழ்குவதாக ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியில், கடலில் மூழ்கும் நகரங்களில் இந்தியாவில் உள்ள பகுதிகளும் உள்ளது. இதில், இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா, வேகமாக மூழ்கும் நகரங்களில் முதல் இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஜகாத்தாவின் பாதி பகுதி ஏற்கனவே கடல் மட்டத்திற்கு கீழ்ப்பகுதியில் உள்ளது. இது போன்ற பாதிப்புகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய காரணங்கள் குறித்தும் அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதில், நிலத்தடி நீரை அதிகமாக எடுத்தல், பெரிய பெரிய அளவிலான கட்டடங்கள் கட்டுதல், அதிகரித்து வரும் மழைப் பொழிவு ஆகியவற்றால் நகரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, இந்தியாவிலும் கவலை அளிக்கும் வகையில், இந்த நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

நான்யாங் தொழில்நுட்ப பல்கலை. ஆய்வு

சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட பல இந்திய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. இந்தியாவின் பழைய தலைநகரான கொல்கத்தா நகரின் சில பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் 2.8 சென்டி மீட்டர் வரை குறைந்து வருவதால், இது போன்ற நிகழ்வுகளை காட்டுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் சென்னையில் உள்ள பகுதிகள் கடலில் மூழ்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இந்தியாவில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு.. அரசு முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் மூழ்கி வரும் நகரங்கள்

இதில், எண்ணூர், பெசன்ட் நகர், மெரினா கடற்கரை போன்ற பகுதிகள் கடலோர அரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கத்திற்கு ஆளாகின்றன. இவை கடலில் மூழ்கும் நிலையில் உள்ளன. ஆண்டுதோறும் 4 சென்டி மீட்டருக்கும் அதிகமான பகுதிகள் கடலில் மூழ்கி வருவதால், குஜராத் நகரம் மூழ்குவதோடு எதிர்கால வெள்ள அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் நகரங்கள் மூழ்வதற்கு காரணம் நீர் வளங்களை அதிகமாக பயன்படுத்துவது என்று கூறப்படுகிறது.

கடலில் மூழ்குவதற்கான காரணம் என்ன

குறிப்பாக வீடுகள், பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் நிலத்தடி நீரை எடுக்கப்படுவது இதற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதே போல, காலநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வு, கடலோர பகுதிகள் அரிப்பு, அடிக்கடி வெள்ளம், நிலம் உள்வாங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நகரப் பகுதிகள் கடலில் மூழ்கி வருவதாகவும் கூறப்படுகிறது.  ஒரு காலத்தில் உறுதியாக நின்ற தெருக்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து கடலின் பகுதியில் மூழ்கி வருகிறது. இந்தியாவில் உள்ள நகரங்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் கடலில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி வருகிறது.

மேலும் படிக்க: மும்பையில் ஐஎஸ்ஐ ஆதரவுடன் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை…மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு!