இந்தியாவில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு.. அரசு முக்கிய அறிவிப்பு!
Population Census With Two Phases | இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அந்த கணக்கெடுப்பை 2026 மற்றும் 2027 என இரண்டு கட்டங்களாக நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி, ஜனவரி 08 : இந்தியாவில் (India) 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Population Census), தற்போது 2026 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கிடையே 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா (Corona) பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கணக்கெடுப்பு நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு
கொரோனா காலக்கட்டத்தில் தள்ளிவைக்கப்பட்ட இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது இரண்டு கட்டங்களாக தொடங்க உள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்பு 2026 ஆம் ஆண்டிலும், இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முதற்கட்ட கணக்கெடுப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஏப்ரல் 01, 2026 முதல் 30, 2026 வரை வீடுகளை பட்டியலிடுதல், வீடுகளை கணக்கெடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!




பொதுமக்களே தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ள முடியும்
தற்போது நடைபெற உள்ள இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களே தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, 2027 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் ஏப்ரல் 01, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தந்த மாநிலமும் யூனியன் பிரதேசமும் குறிப்பிடும் 30 நாட்களுக்குள் நடைபெறும் என்று மத்திய அரசு இதன் மூலம் அறிவித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
தற்போதைய நிலவரப்படி உலகில் அதிக மக்களை தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்த நிலையில் தான், 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பை அரசு நேற்று (ஜனவரி 07, 2026) வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.