ஹைதராபாத்தில் அப்பல்லோ சர்வதேச மருத்துவ மாநாடு 2026 – அப்படி என்ன ஸ்பெஷல்?
அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் உலக அளவிலான மருத்துவ மாநாடு இண்டர்நேஷனல் ஹெல்த் டயலாக் International Health Dialogue) என்ற பெயரில், 2026 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 13வது ஆண்டாக நடைபெறுகிறது.
அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் உலக அளவிலான மருத்துவ மாநாடு இண்டர்நேஷனல் ஹெல்த் டயலாக் International Health Dialogue) என்ற பெயரில், 2026 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 13வது ஆண்டாக நடைபெறும் இந்த மாநாடு, நோயாளியின் பாதுகாப்பு, மருத்துவத்துறையில் புதுமைகள் மற்றும் சுகாதார அமைப்புகளில் மாற்றங்களை ஊக்குவிக்கும் உலகின் முக்கிய தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இம்முறை மாநாட்டின் கருப்பொருளாக குளோபல் வாய்ஸ், ஒன் விஷன் என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் மருத்துவ துறையின் புதுமைகள் மற்றும் கருத்துகள் என ஒரே இலக்கில் ஒருங்கிணைத்து, நோயாளிகளுக்கு மேம்பட்ட மருத்துவம் இதன் நோக்கமாகும்.
இந்த ஆண்டு மாநாட்டில்,நோயாளி பாதுகாப்பு மாடல்கள், மனிதநேயத்தை மையமாகக் கொண்ட மருத்துவ வடிவமைப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் மருத்துவமனை செயல்பாடுகளில் முழுமையான சிறப்புத்தன்மை ஆகிய முக்கிய அம்சங்கள் மையமாக இருக்கும். இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் சங்கிதா ரெட்டி கூறுகையில், இண்டர்நேஷனல் ஹெல்த் டாக் இன்று உலக மருத்துவத்துறையில் மருத்தவர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் மாற்றத்தை முன்னெடுக்கும் தலைவர்கள் ஒன்று கூடும் முக்கிய மேடையாக வளர்ந்துள்ளது. ஹைதராபாத் மாநாடு, செயற்கை நுண்ணறிவு, தரவுகள் மற்றும் டிஜிட்டல் சூழல்களை மனிதநேய மதிப்புகளுடன் இணைத்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற அமைப்புகளை உருவாக்கும்” என தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் நோயாளி பாதுகாப்பை மேம்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும். Healthcare Operations & Patient Experience Conference (HOPE) மருத்துவமனை செயல்பாடுகளில் திறன், கருணை மற்றும் புதுமையை இணைத்து நோயாளி அனுபவத்தை மேம்படுத்த கவனம் செலுத்தும். Transforming Healthcare with IT (THIT) மாநாடு, உலகம் முழுவதிலிருந்தும் சுகாதார மற்றும் தகவல் தொழில்நுட்ப தலைவர்களை ஒன்று சேர்த்து, புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடும். அதேபோல் CLINOVATE என்ற மருத்துவ கல்வி தொடர், புற்றுநோய், இதயநோய், பெண்கள் நலம், நீண்ட ஆயுள் மற்றும் ஆய்வக மருத்துவம் போன்ற துறைகளில் உலகளாவிய நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் பயிற்சிகளை வழங்கும்.
இந்த மாநாட்டில் நைஜர், பப்புவா நியூ கினி, காங்கோ குடியரசு, பெர்முடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், சர்வதேச நோயாளி பாதுகாப்பு, சுகாதார தரநிலை மற்றும் புதுமை துறைகளில் முன்னணி நிபுணர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.