Kerala: தேர்வு எழுத சென்ற பெண்.. அழுத குழந்தை.. தாய்ப்பால் கொடுத்த பெண் காவலர்!
கேரளாவில், ரயில்வே தேர்வு எழுதச் சென்ற தாயின் இரண்டு மாத குழந்தை பசியால் அழுதது. குழந்தையின் தந்தை அதன் அழுகையை சமாளிக்க முடியாமல் திண்டாடினார். அப்போது, அருகில் இருந்த பெண் காவலர் பார்வதி, குழந்தைக்கு பாலூட்டி அமைதிப்படுத்தினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பெண் காவலருக்கு பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.

கேரளா, ஆகஸ்ட் 22: கேரளாவில் குழந்தையை குடும்பத்தினரிடம் விட்டு விட்டு தாய் தேர்வு எழுத சென்ற நிலையில் அக்குழந்தை பசியால் கதறி அழுதது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். கல்வி தொடங்கி சமூகத்தில் பல்வேறு நிலைகளிலும் அவர்கள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்பதற்குள் பல்வேறு விதமான சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு, குழந்தை பிறந்த பிறகு பல்வேறு எண்ணங்களை சமாளித்து கல்வியும் தங்களது லட்சியத்தில் சாதிப்பவர்கள் இருக்க செய்கிறார்கள். இப்படியான நிலையில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை விட்டு விட்டு சென்ற தாய்
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே பேட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா எஸ். கிருஷ்ணா. இவருக்கு நிதின் என்ற கணவரும் இரண்டு மாத குழந்தையும் உள்ளனர். இதனிடையே அஞ்சனா ரயில்வே வாரிய தேர்வுக்காக கடந்த சில மாதங்களாகவே தயாராகி வந்தார். இந்த நிலையில் கடந்த 2025 ஆகஸ்ட் 20 ஆம் தேதி புதன்கிழமை நகரூர் என்ற பகுதியில் உள்ள ராஜதானி பொறியியல் கல்லூரியில் ரயில்வே வாரிய தேர்வு நடைபெற்றது.
Also Read: அறிவியல் ஆய்வுகளுக்கு சவால் விடும் சிவன் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?




இதில் பங்கேற்ற அஞ்சனா தனது இரண்டு மாத குழந்தையை கணவர் நிதின் கையில் கொடுத்துவிட்டு உள்ளே சென்று தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் குழந்தை சிறிது நேரம் வரை அமைதியாக இருந்த நிலையில் அழத் தொடங்கியது. தொடர்ச்சியாக அழுகையை நிறுத்த முடியாமல் நித்தின் திணறி போனார். அவரும் வேடிக்கை காட்டி, தாலாட்டுப்பாடி என பல வகையான முயற்சிகளை கையாண்டும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.
தாயாக மாறிய பெண் காவலர்
காலையில் தேர்வு எழுத சென்ற அஞ்சனா வருவதற்கு மதியம் ஆகிவிடும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் நிதின் பரிதவித்தார். தொடர்ச்சியாக குழந்தையின் அழுகை சட்டம் கேட்டுக் கொண்டிருந்ததால் திருவனந்தபுரம் வடக்கு பிரிவில் காவலராக பணியாற்றி வரும் கொல்லத்தைச் சேர்ந்த பார்வதி என்பவர் அதனை கவனித்தார். உடனடியாக விரைந்து நிதினை நோக்கி வந்து குழந்தையை பெற்று சற்றும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த தனி அறைக்கு எடுத்துச் சென்று தாய்ப்பால் கொடுத்தார்.
Also Read: பள்ளிக்கு விசிட் அடித்த குட்டி யானை – குழந்தைகள் மகிழ்ச்சி – வைரலாகும் கியூட் வீடியோ
அதன் பின்னர் குழந்தை அழுகையை நிறுத்தியது. இதன் பின்னர்தான் நிதினுக்கு குழந்தை பசியால் அழுதது என்பது தெரிய வந்தது. இதற்கிடையில் பசியால் கதறி அழுத மற்றொரு பெண்ணின் குழந்தைக்கு பெண் காவலர் பார்வதி பாலூட்டிய விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். காவல்துறை தரப்பிலும் பார்வதியின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.