கேரளாவை அச்சுறுத்தும் மூளையை திண்ணும் அமீபா தொற்று.. உயிருக்கு போராடும் 2 பேர்!
Kerala Brain Eating Amoeba Cases : அண்டை மாநிலமான கேரளாவில் மூளையைத் திண்ணும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி உயிரிழந்துள்ள நிலையில், மேலும் மூன்று பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

கேரளா, ஆகஸ்ட் 21 : கேரளாவில் மூளையைத் தாக்கி உயிரைக் கொல்லும் அமீபா தொற்று (Kerala Brain Eating Amoeba) காரணமாக, 9 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும், மூன்று பேரும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். அண்டை மாநிலமான கேளராவில் அவ்வப்போது நோய் தொற்றுகள் எளிதாக பரவி வருகிறது. கொரோனா தொற்று கூட நாட்டிலேயே முதன்முதலில் கேரளாவில் தான் பதிவானது. மேலும், கேளராவில் பன்றிக் காய்ச்சல், நிபா வைரஸ், பறவைக் காய்ச்சல் என பல தெற்று நோய்கள் அவ்வப்போது பரவி வருகிறது. இந்த நிலையில், தற்போது கேரளாவில் மூளைக் காய்ச்சல் பெரும் அச்சறுத்தி வருகிறது. மூளையைத் தாக்கி உயிரைக் கொல்லும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தாமரச்சேரியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி இந்த நோயால் உயிரிழந்தார். 2025 ஆகஸ்ட் 13ஆம் தேதி காய்ச்சல் காரமணாக உள்ளூர் மருத்துவமனையில அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, சிறுமியின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய சோதனை நடத்தப்பட்டது.
Also Read : தவறான விளம்பரம்… ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்- என்ன காரணம் தெரியுமா?




மூளையை திண்ணும் அமீபா தொற்று
அதில், அமீபிக் மூளை அழற்சியால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள நீர்நிலையங்களில் மாதிரிகளை சேகிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில், அமீபா தொற்றால் மேலும், மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமீபா தொற்றால் உயிரிழந்த 7 வயது சிறுமியின் சகோதரனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், ஓமசேரி பகுதியைச் சேர்ந்த 3 மாத குழந்தை, அண்ணசேரி பகுதியைச் சேர்ந்த 40 வயது நபருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 3 மாத குழந்தை வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூளையை திண்ணும் அமீபா எப்படி பரவுகிறது?
1971ல் இந்தியாவில் மூளையை திண்ணும் அமீபா தொற்று பதிவானது. மேலும், கேரளாவில் 2016ல் முதல் தொற்று பதிவானது. 2016ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை மாநிலத்தில் எட்டு தொற்றுகள் மட்டுமே பதிவாகி உள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் கேரளாவில் அமீபா தொற்றால் 36 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார்.
Also Read : ஆசிரியை-யை உயிருடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவர்.. ம.பியில் அதிர்ச்சி சம்பவம்!
இந்த நிலையில், தற்போது இந்த நோய் கேரள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று ஏரிகள், ஆறுகள் போன்ற இடங்களில் வேமாக உருவாகும். இந்த நீரில் குளிக்கும்போது மூக்கு வழியாக இவை உடலில் நுழைந்து, நேரடியாக மூளையைத் தாக்குகிறது. அமீபா உடலுக்குள் நுழைந்த சில நாட்களிலேயே காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்க ஏற்படும். இந்த தொற்று உடலில் நுழைநது 20 நாட்களுக்குள் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.