Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பள்ளிக்கு விசிட் அடித்த குட்டி யானை – குழந்தைகள் மகிழ்ச்சி – வைரலாகும் கியூட் வீடியோ

Wayanad Wonder: யானைகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உயிரினம். இந்த நிலையில் கேரளா மாநிலம் வயநாடு அருகே ஒரு பள்ளியில் குட்டி யானை ஒன்று விசிட் அடித்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

பள்ளிக்கு விசிட் அடித்த குட்டி யானை – குழந்தைகள் மகிழ்ச்சி – வைரலாகும் கியூட் வீடியோ
பள்ளிக்குள் நுழைந்த குட்டி யானை
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Aug 2025 18:50 PM

பொதுவாக யானைகளை கண்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குதூகலமாகி விடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு யானைகள் என்றால் மிகவும் பிடிக்கும். சிறு வயதில் நம்மில் யானைகள் மீது சவாரி செய்த அனுபவம் இருக்கும். அந்த வகையில் ஒரு குட்டி யானை ஒன்று பள்ளிக்கு சென்று குழந்தைகளை மகிழ்வித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா (Kerala) மாநிலம் வயநாட்டில் உள்ள ஒரு மலை கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கு, கடந்த ஆகஸ்ட் 21, 2025 அன்று குட்டி யானை வந்தது. இதனால் பள்ளியில் இருந்த மாணவர்கள் யானையை பார்த்து மகிழ்ந்தனர். அதற்கு ஏற்ப குட்டி யானையும் அவர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளியை சுற்றி வருகிறது.

பள்ளிக்கு வந்த குட்டி விருந்தினர்

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வைரலாகின்றன.  ஆனால் அவற்றில் சில மட்டுமை மக்களின் மனங்களை வெல்கின்றன. இது போன்ற வீடியோக்களை தான் மக்கள் அதிகம் பகிர்கிறார்கள்.  இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது கேரளாவில் உள்ள ஒரு பள்ளியைப் பற்றியது.  வயநாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளிக்கு ஆகஸ்ட் 21, 2025 அன்று காலை எதிர்பாராத விருந்தினர் வந்தார். மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் விருந்தினரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த விருந்தினர் வேறு யாரும் இல்லை, குட்டி யானை தான்.

இதையும் படிக்க : குழந்தையை போல மகிழ்ச்சியாக பந்து விளையாடிய யானை.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

வைரலாகும் வீடியோ


கேரள-கர்நாடக எல்லையில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள செக்கடி கிராமம், மூன்று பக்கங்களிலும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இது முக்கியமாக பழங்குடி சமூகங்கள் வசிக்கும் பகுதி. செக்கடியில் உள்ள அரசு பள்ளியில் சுமார் 115 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், மாலை நேரத்தில் பெரும்பாலும் கூட்டமாகச் செல்லும் யானைகள் செல்வதை பார்க்க முடியும். இந்த சூழலில், திங்கள்கிழமை காலை ஒரு குட்டி யானை எதிர்பாராத விதமாக பள்ளி வளாகத்திற்குள் தனியாக நுழைந்தது.  குட்டி யானையைப் பார்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையும் படிக்க : பள்ளிக்கு குதிரையில் செல்லும் சிறுவன்.. வியக்கவைக்கும் சுவாரஸ்ய வீடியோ!

வைரலாகும் வீடியோவில், குட்டி யானை ஆர்வத்துடன் பள்ளியைச் சுற்றித் திரிவதைக் காணலாம்.  யானையின் அழகை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். குட்டி யானை பள்ளியில் சேரவோ அல்லது மாற்றுச் சான்றிதழுக்காகவோ வந்திருக்கலாம் என்று சிலர் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், பள்ளி வளாகத்திற்குள் யானை நுழைந்தது இதுவே முதல் முறை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.