Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : பள்ளிக்கு குதிரையில் செல்லும் சிறுவன்.. வியக்கவைக்கும் சுவாரஸ்ய வீடியோ!

Boy Rides Horse to School | சிறுவர்கள் பெற்றோர்கள் உடன் இருசக்கர வாகனத்தில், சைக்கிள், பள்ளி பேருந்து ஆகியவற்றில் பள்ளிக்கு செல்வதை பார்த்திருப்போம். ஆனால், மேகாலயாவில் சிறுவன் ஒருவர் குதிரையில் பள்ளிக்கு செல்லும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : பள்ளிக்கு குதிரையில் செல்லும் சிறுவன்.. வியக்கவைக்கும் சுவாரஸ்ய வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Aug 2025 22:53 PM

போக்குவரத்து வசிதகள் எதுவும் இல்லாதபோது பொதுமக்கள் குதிரை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் மீது பயணம் செய்து வந்தனர். ஆனால் தற்போது சாலை முதல் வானம் வரை மிக விரைவாக செல்லக்கூடிய வகையில் அதிவிரைவு வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இதன் காரணமாக குதிரை வண்டி, மாட்டு வண்டியை எல்லாம் பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை. இத்தகைய சூழலில் மேகாலயாவில் பள்ளி சிறுவன் ஒருவன் பள்ளிக்கு குதிரையில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

குதிரையில் பள்ளிக்கு செல்லும் சிறுவன்

போக்குவரத்து வசதிகள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தனிநபர் பயணிக்க கூடிய வாகனங்கள் முதல் 500 பேர் ஒரே நேரத்தில் பயணிக்க கூடிய அளவு வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் என அனைத்து விதமான போக்குவரத்து அம்சங்களும் உள்ளன. ரயில், விமான போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் கூட குறைந்தபட்ச போக்குவரத்தான பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும். இந்த நிலையில், சிறுவன் ஒருவன் குதிரையில் பள்ளிக்கு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : சீனாவில் போக்குவரத்தை சரிசெய்யும் ரோபோ.. ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் சிறுவனின் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Twinkle JoAnna (@twinklejoanna)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் புத்தக பை அணிந்துக்கொண்டு குதிரையில் பள்ளிக்கு பயணம் செய்கிறார். அவருக்கு பாதுகாப்புக்காக நாய் ஒன்றும் உடன் செல்கிறது. சிறிது நேரம் கழித்து சாலையில் வாகனங்களுக்கு இடம் விட்டுவிட்டு சாலையின் ஓரமாக குதிரையை அந்த சிறுவன் ஓட்டிச் செல்கிறார். அவர்களை பின்தொடர்ந்து அந்த நாயும் வேகமாக ஓடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்ற நபர்.. விடாமல் துரத்திய யானை.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிறுவன் குதிரையில் பள்ளிக்கு செல்வதை பார்க்க இளவரசர் பள்ளிக்கு செல்வதை போல இருப்பதாக ஒருவர் கூறியுள்ளார். இந்த சிறுவன் மிகவும் அற்புதமான வாழ்க்கையை வாழ்வதாக மற்றொருவர் கருத்து பகிர்ந்துள்ளார்.