Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிரீன் சிக்னலுக்காக காத்திருந்து சாலையைக் கடந்த மான் – வைரலாகும் வீடியோ

Unbelievable Animal Behavior: சமயங்களில் மனிதர்களை விட விலங்குகள் மிகவும் புொறுப்புடன் நடந்து கொள்கின்றன. சமீபத்தில் யானை ஒன்று சாலையில் கிடந்த குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்ட வீடியோ வைரலானது. அந்த வகையில் ஜப்பானில் மான் ஒன்று சாலை விதிகளை கடைபிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கிரீன் சிக்னலுக்காக காத்திருந்து சாலையைக் கடந்த மான் – வைரலாகும் வீடியோ
கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கும் மான்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 Aug 2025 23:51 PM

வேகமான வாழ்க்கையில், போக்குவரத்து விதிகள் தொடர்பாக பலர் பெரும்பாலும் தவறு செய்கிறார்கள்.  அவை நம்மை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நம்மை சார்ந்தவர்களின் வாழ்விலும் சிக்கலை ஏற்படுத்துகின்றன. ஆனால் விலங்குகள் அப்படி அல்ல. அதற்கு ஒன்றை கற்றுக்கொடுத்தால் அது ஒரு போதும் மறக்காது. யானைகள் (Elephant) மற்றும் நாய்கள் மனிதர்களுடன் மிகவும் நன்றியுடன் பழகும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் மற்றவர்களை நேசிப்பதில் விலங்குகள் மனிதர்களை விட மேலானது.  அந்த வகையில்  போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்கும் மானின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகி வருகிறது. பலரும் தங்கள் ஆச்சரியங்களை பதிவு செய்து வருகின்றனர்.

சாலை விதிகளை கடைபிடிக்கும் மான்கள்

ஜப்பானில் உள்ள நாரா பூங்காவில் நடந்த இந்த காட்சியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், போக்குவரத்து சிக்னல் கிரீனாக மாறுவதற்கு பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்களுடன் இரண்டு மான்கள் ஜோடியாக நிற்கின்றன. மக்களால் சூழப்பட்டிருந்தாலும் மான்கள் சிக்னலில் அமைதியாக நிற்கின்றன. அவை போக்குவரத்து சிக்னல் மாறுவதற்காக பொறுமையாக காத்திருக்கின்றன. கிரீன் சிக்னல் விழுந்தவுடன், அதற்காகத் தான் காத்திருந்தது போல மற்றவர்களுடன் வேகமாக சாலையைக் கடக்கின்றன.

இதையும் படிக்க : பூனை என நினைத்து சிறுத்தையை துரத்திய நாய்கள்.. வைரலாகும் சிசிடிவி காட்சி!

வைரலாகும் மான்களின் வீடியோ

 

 

View this post on Instagram

 

A post shared by Ameana Finds (@amina_finds)

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @amina_finds என்ற நபரால் பகிரப்பட்டது. பயனர் அதற்கு, “ஜப்பானில் 1000 IQ கொண்ட மான்” என்று தலைப்பிட்டுள்ளார். வீடியோவில் உள்ள மான்கள் தங்கள் ஒழுக்கமான நடத்தையால் இணையத்தின் இதயங்களை வென்றுள்ளன. நெட்டிசன்கள் அவற்றைப் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க : நடைபாதையில் கிடந்த குப்பை.. பொறுப்பாக எடுத்து குப்பை தொட்டியில் போட்ட யானை குட்டி!

ஜப்பானில் உள்ள நாரா பூங்கா அதன் சிகா என்ற வகை மான்களுக்காக மிகவும் பிரபலமானது. அவை அங்கே புனிதமாகக் கருதப்படுகின்றன. அவை சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கைகளால் அவற்றுக்கு உணவளிக்கின்றனர். பதிலுக்கு, மான்களும் தங்கள் நன்றியைத் தெரிவிக்க தலை வணங்குகின்றன.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, மக்கள் பல கருத்துக்களை தெரிவித்தனர். ஜப்பானில் உள்ள அனைவரும் ஒழுக்கமானவர்கள். போக்குவரத்து சிக்னலைப் பார்த்த பிறகு மான்கள் கூட சாலையைக் கடக்கின்றன என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார். மற்றொரு பயனர்,  மான்களின் செயல் எங்கள் இதயங்களை வென்றது என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இந்தியர்கள் இந்த மான்களை பார்த்தாவது ஒழுங்காக சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.