Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : பாட்டு பாடும் பாதுகாவலர்.. செல்லவிடாமல் இருக்கி பிடித்துக்கொண்ட யானை.. கியூட் வீடியோ!

Elephant Refuses to Let Go of Singing Caretaker | இணையத்தில் ஒவ்வொரு நாளும் யானகள் குறித்த சுவாரஸ்யமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பாட்டு பாடும் பாதுகாவலரை யானை ஒன்று செல்ல விடாமல் இருக்கி பிடித்துக்கொண்டு இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : பாட்டு பாடும் பாதுகாவலர்.. செல்லவிடாமல் இருக்கி பிடித்துக்கொண்ட யானை.. கியூட் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 11 Aug 2025 20:02 PM

யானைகள் மிகவும் உணர்வு மிக்க உயிரினங்களாக கருதப்படுகின்றன. மனிதர்களுடன் மிக நெருங்கி பழகும் வன விலங்காகவும் அவை உள்ளன. இந்த நிலையில், யானைகள் மனிதர்களுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், யானை ஒன்று இனிமையாக பாட்டு பாடும் தனது பாதுகாவலரை செல்லவிடாமல் இருக்கமாக பிடித்துக்கொண்டு இருக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாட்டு பாடும் பாதுகாவலர் – செல்லவிடாமல் இருக்கமாக பிடித்துக்கொண்ட யானை

யானைகள் எவ்வளவுக்கு எவ்வளவு கோபம் கொண்ட உயிரினமாக இருக்கின்றனவோ அதே அளவுக்கு அவை மிகவும் மென்மையான மற்றும் அதிக பாசம் கொண்ட உயிரினங்களாக உள்ளன. அதிலும் குறிப்பாக மனிதர்களுக்கும், யானைகளுக்கும் உள்ள பாச உறவை விவரிக்கவே முடியாது. யானைகள் ஒரு மனிதர் மீது பாசம் வைத்துவிட்டது என்றால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். அப்படி தான் இந்த யானை பாட்டு பாடும் தனது பாதுகாவலரை செல்ல விடாமல் இருக்கி பிடித்துக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்த ஆண் கொரிலா.. Possessive ஆன பெண் கொரிலா.. கியூட் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் யானை – பாதுகாவலரின் பாச வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Lek Chailert (@lek_chailert)

இணையத்தில்  வைரலாகும் அந்த வீடியோவில் யானைகளுக்கு மத்தியில் நின்றுக்கொண்டு பெண் ஒருவர் பாட்டு பாடுகிறார். அப்போது யானை ஒன்று அந்த பெண்ணை செல்ல விடாமல் தனது வாயாலும், தும்பி கையாலும் அந்த பெண்ணை இருக்கமாக பிடித்துக்கொள்கிறது. அந்த யானை ஒட்டியே மற்ற யானைகளும் நின்றுக்கொண்டு தங்களது பாதுகாவலரின் பாடலை கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : காணாமல் போன நிலையில், மீண்டும் தாயுடன் இணைந்த குட்டி யானை.. இணையத்தில் வைரலாகும் பாச போராட்ட வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் அந்த யானை சிரிக்கிறது என ஒருவர் கருத்து பகிர்ந்துள்ளார். மற்றொருவர், இதன் மூலம் அந்த யானைகள் உங்களுடன் நேரம் செலவிட எவ்வளவு விரும்புகின்றன என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளலாம் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.