Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதல் ஜோடியுடன் குழந்தையை போல் கொஞ்சி விளையாடிய குட்டி யானை.. வைரல் வீடியோ!

Baby Elephant's Adorable Playtime with Couple | யானைகள் மனிதர்கள் மீது அதீத அன்பு கொள்ளும் உயிரினமாக உள்ளன. அந்த வகையில் குட்டி யானை ஒன்று காதல் ஜோடியின் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக அவர்களுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

காதல் ஜோடியுடன் குழந்தையை போல் கொஞ்சி விளையாடிய குட்டி யானை.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Jul 2025 23:24 PM

விலங்குகள் மனிதர்களை விட மாறுபட்ட குணம் கொண்டவை. அவை திடீரென மனிதர்களுக்கே ஆபத்தானவையாக மாறிவிடும். ஆனால், விலங்குகள் மனிதர்கள் மீது அன்பு வைத்துவிட்டால் அவை தங்களது உயிரை கொடுத்தாவது தாங்கள்  நேசிக்கும் மனிதர்களை காப்பாற்றும். அந்த வகையில், மனிதர்கள் மீதான யானை குட்டியின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில்,  அந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனிதர்களுடன் கொஞ்சி விளையாடும் யானை குட்டி

விலங்குகள் எப்போது வேண்டுமானாலும் ஆக்ரோஷமாக மாறும் தன்மை கொண்டவை. எனவே அவற்றிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பலர் கூறுவர். ஆனால், விலங்குகள் தங்களுக்கு நெருக்கமான மனிதர்களிடம் மிகுந்த அன்புடன் நடந்துக்கொள்ளும். ஆனால், ஒருசிலரால் மட்டுமே விலங்குகளின் அந்த அலாதி அன்பை பெற முடியும். அந்த வகையில், யானை குட்டியின் மிகுதியான அன்பை பெறும் ஒரு ஜோடியின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : நடைபாதையில் கிடந்த குப்பை.. பொறுப்பாக எடுத்து குப்பை தொட்டியில் போட்ட யானை குட்டி!

காதல் ஜோடியுடன் கொஞ்சி விளையாடும் யானை குட்டி – கியூட் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் காதல் ஜோடி ஒன்று தரையில் அமர்ந்திருக்கிறது. அப்போது, அவர்களுக்கு பின்னால் யானை குட்டி ஒன்று வருகிறது. அந்த யானை குட்டி திடீரென அந்த காதல் ஜோடியின் மீது ஏறி விளையாட தொடங்கிறது. யானை குட்டியின் அந்த குறும்புத்தனத்தை பார்த்து அந்த ஆணும், பெண்ணும் மகிழ்ச்சியில் சிரிக்கின்றனர். ஆனால், அந்த யானை குட்டியோ ஒரு குழந்தையை போல அவர்களின் தோலின் மீது தும்பிக்கையை வைத்து விளையாடுவது, தோலின்மீது காலைபோட்டு விளையாடுவது உள்ளிட்ட செயல்களை செய்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : நீர்வீழ்ச்சியில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள்.. சுத்தம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணி!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த உலகின் உன்னதமான அன்பை அந்த காதல் ஜோடி பெற்றுள்ளதாக பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.