வீட்டை சூழந்த வெள்ள நீர்.. பால் ஊற்றி, மலர் தூவி வரவேற்ற காவலர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Prayagraj Floods Viral Video | உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், காவலர் ஒருவர் அந்த நீரை மிகவும் புனிதமாக வரவேற்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிராயாக்ராஜ், ஆகஸ்ட் 04 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) மழை வெள்ளம் காரணமாக வீட்டை சூழந்த கங்கை நீரை காவல்துறை அதிகாரி ஒருவர் பால் ஊற்றி, பூக்களை வீசி வரவேற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக அங்கு நீர்நிலைகள் நிறைந்த நிலையில், கங்கை நதியின் நீர் ஊருக்குள் புகுந்த நிலையில், அவர் இவ்வாறு செய்துள்ளார். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கனமழை காரணமாக ஊருக்குள் புகுந்த கங்கை நீர்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பல மாநிலங்களில் பரவாலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக உத்தர பிரதேசத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் வெளியே வர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.




இதையும் படிங்க : நிலநடுக்கத்திலும் அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் டாக்டர் செய்த செயல்.. குவியும் பாராட்டு!
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கங்கை நதி நீர் முழுவதுமாக நிரம்பிய நிலையில், அதன் அருகில் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அந்த வகையில் தனது வீட்டை சுற்றி வெள்ள நீர் சூழந்த நிலையில், உதவி காவல் ஆய்வாளர் சந்திரதீப் நிஷாத் என்ற காவலர் கங்கை நீரை பால் ஊற்றி, மலர் தூவி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.
இணையத்தில் வைரலாகி வரும் காவலரின் வீடியோ
When floods come, people curse God,
but when Maa Ganga knocked at the door of UP Police Inspector Chandrajeet Nishad,
Nishad Raj worshipped Maa Ganga and said,
O Mother, you came to my door, I am blessed, pic.twitter.com/8iIp5hS6uF
— The Atlas Times (@Times_Atlas) August 2, 2025
இணையத்தில் வைரலாகும் அனத வீடியோவில் காவல்துறை அதிகாரி சந்திரதீப் நிஷாத், தனது வீட்டை சுற்றி சூழ்ந்துள்ள கங்கை நீரை வரவேற்கும் விதமாக அதில் முதலில் பால் ஊற்றுகிறார். பிறகு மலர்களை தூவுகிறார். அப்போது அவர் என் தாயே, நீ என் வாசல் வந்துள்ளாய், நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.