Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தெரு நாய்களை 8 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு

Stray Dogs : டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தெரு நாய்களை 8 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என ஆகஸ்ட் 11, 2025 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய்களால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாக வெளியான செய்திகளை அடுத்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தெரு நாய்களை 8 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Aug 2025 14:53 PM

தெரு நாய்கள் (Stray Dogs) பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இது தொடர்பாக சமூக வலைதலங்களில் வெளியாகும் வீடியோ மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை, 2025 உச்சநீதிமன்றம் (Supreme Court) இது தொடர்பான வழக்கை தானாக முன்வந்து பதிவு செய்தது. அந்த வழக்கில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் தெரு நாய்களால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதிக்கப்படுவதாக இந்த வழக்கில் குறிப்பிட்டிரு்தது.  இந்த வழக்கு ஆகஸ்ட் 11, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் எனவும் இதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்களால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் ஏற்படும் ரேபிஸ் தொடர்பான செய்திகள் கவலையை அளிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணையின்போது அரசு மற்றும் மாநகராட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்த நாய்கள் தங்கும் காப்பகத்தை ஏற்படுத்த வேண்டும். எனவும் குடியிருப்புகளில் திரியும் தெரு நாய்களை அகற்றி காப்பகத்தில் விடப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதையும் படிக்க : வருமான வரி மசோதாவை திரும்ப பெற்ற மத்திய அரசு – காரணம் என்ன?

மேலும் மறு உத்தரவு வரும் வரை நாய்கள் காப்பகங்களில் வைத்து பராமரிக்க வேண்டும், இதற்கு யாரேனும் தனி நபர்கள் அல்லது அமைப்புகள் தடையாக இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.  குழந்தைகள் மற்றும் முதியோர்கள் நாய் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி பலியாகும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது எனவும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : விவசாயிகளின் நலனே முக்கியம்.. சவாலுக்கு நான் தயார்! அமெரிக்க வரி குறித்து பேசிய பிரதமர் மோடி!

டெல்லி மாநகராட்சியின் நடவடிக்கைகள்

இதற்கிடையே டெல்லி மாநகராட்சி சமீபத்தில் தனது விலங்குகள் நல வாரிய மையங்களை மேம்படுத்தவும், மண்டல வாரியாக ரேபிஸ் விழிப்புணர்வு பிராச்சாரங்களை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளது. மேலும் என்ஜிஓக்களுடன் இணைந்து நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளது. இதன் மூலம் நாய்களின் உடல் நலம் உள்ளிட்டவை குறித்து தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் நாய்களுக்கு இரத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் இதற்கான தீர்மானங்கள் கடந்த ஆகஸ்ட் 4, 2025 அன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்டன எனவும் கூறப்படுகிறது.