Viral Video : சீனாவில் போக்குவரத்தை சரிசெய்யும் ரோபோ.. ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ!
Humanoid Robot Directs Traffic in China | மனித வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணி அமர்த்தப்படுவது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், மனித வடிவிலான ரோபோ ஒன்று போக்குவரத்தை சரிசெய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக அளவில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தொழில்நுட்பத்தின் மைல் கல்லாக விளங்குவது தான் செயற்கை நுண்ணறிவு. இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தி மனித வடிவிலான ரோபோக்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ரோபோக்கள் பல்வேறு துறைகளில் பணி அமர்த்தப்படுவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், மனித வடிவிலான ரோபோ ஒன்று சீனாவில் போக்குவரத்தை சரிசெய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
போக்குவரத்தை சரி செய்த மனித வடிவிலான ரோபோ
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது பல்வேறு இடங்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக உணவகங்கள், தொழிற்சாலைகள், திருமண வரவேற்பு உள்ளிட்ட இடங்களில் இந்த வகையான ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் சீனாவில் போக்குவரத்தை சரிசெய்வதற்காக மனித வடிவிலான ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : துபாயின் சாலையில் ஓடிய மனித வடிவிலான ரோபோட்.. வியந்து பார்த்த பொதுமக்கள்!
இணையத்தில் வைரலாகும் ரோபோவின் வீடியோ
2. Robots ya trabajan como policías de tráficopic.twitter.com/SIZxwsptrK
— IVAN | IA (@ivnways) August 5, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் போக்குவரத்து காவலர்கள் எவ்வாறு சாலையின் நடுவே நின்றுக்கொண்டு போக்குவரத்தை சரிசெய்வார்களோ அதேபோல அந்த ரோபோவும் மிக அழகாக போக்குவரத்தை சரிசெய்கிறது. பொதுமக்களை சாலையை கடக்க வைப்பது, வாகனங்களை முறையாக சாலையில் செல்ல வைப்பது உள்ளிட்ட செயல்களை செய்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : இந்தியாவை விட்டு செல்ல மனமில்லாமல் அழுத வெளிநாட்டு பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ரோப்போக்கள் இன்னும் என்ன என்ன வேலைகளை செய்ய போகின்றனவோ என ஒருவர் பதிவிட்டுள்ளார். போகின்ற போக்கில் இருக்கின்ற வேலை வாய்ப்புகளும் இல்லாமல் போய்விடும் போல் இருக்கிறது என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக துபாயின் சாலைகளில் மனித வடிவிலான ரோப்போ ஒன்று சுற்றித் திரிந்த வீடியோ வைரலான நிலையில், தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.