Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மதுபோதையில் ரயில் நிலைய நடைமேடையில் காரை ஓட்டிய நபர் – வைரலாகும் வீடியோ

Shocking Incident: மதுபோதையில் குடிமகன்கள் அலட்சியமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதலங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் குடிமகன் ஒருவர் ரயில் நிலைய நடைமேடையில் காரை ஓட்டி செல்கிறார். உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மதுபோதையில் ரயில் நிலைய நடைமேடையில் காரை ஓட்டிய நபர் – வைரலாகும் வீடியோ
நடை மேடையில் கார் ஓட்டிய நபர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Aug 2025 23:42 PM

மதுபோதையில் குடிமகன்கள் செய்யும் அலப்பறைகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். மது என்பது சமூகத்தில் மிக சாதாரணமான பழக்கமாக மாறிவிட்டது. குறிப்பாக குடிபோதையில் வண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடிபோதையில் பலர் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாக்கும் செயல்கள் அடிக்கடி செய்திகளில் வெளியாகி அதிர்ச்சியாகி வருகிறது. சமீபத்தில், உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh)மாநிலம் மீரட்டில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது. முழுமையாக குடிபோதையில் இருந்த ஒருவர், மீரட்டில் உள்ள கான்ட் ரயில் நிலையத்தின் (Railway Station) நடைமேடையில் தனது காரை ஓட்டிச் சென்றார். நடைமேடையில் ரயில் இருந்ததால் அனைவரும் பீதியடைந்தனர், ஆனால் காரின் ஓட்டுநர் பீதியடையவில்லை. இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ரயில் நிலைய நடைமேடையில் காரை ஓட்டிய நபர்

கேன்ட் ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் பதிவு எண் கொண்ட கார் ஒன்று நடை மேடையில் சென்றது.  அப்போது அதன் அருகே சில அடி தூரத்தில் நின்றது. ஒரு பக்கத்தில் நடைமேடையில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. காரை ஓட்டியவர் சந்தீப் டக்கா என ரயில்வே போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் ராணுவத்தில் பணிபுரிகிறார் என்பது தெரியவந்துள்ளது. பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காகவும், விதிகளை மீறியதற்காகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் மது அருந்தியிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. டக்கா கைது செய்யப்பட்டு அவரது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிக்க : வளர்ப்பு நாயை வைத்து சிறுவனை கடிக்க வைத்த நபர்.. இணையத்தை கடுப்பாக்கிய வீடியோ!

நடைமேடையில் கார் ஓட்டிச்சென்ற நபரின் வீடியோ

 

இதையும் படிக்க : கையில் பாம்புகளை பிடித்துக்கொண்டு ஊர்வலம் சென்ற ஆண்கள்.. பீகாரில் வினோத சம்பவம்!

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால், நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவர் நல்லவேளை அவர் காரை ரயிலின் மீது வீடவில்லை என்றார். மற்றொருவர் உத்தரப்பிரதேசம் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற ஆச்சரியத்தக்க சம்பவங்கள் நடப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார். இன்னும் சிலர் இந்த சம்பவத்திற்கு ரயில்வே போலீசாரின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். கார் நடைமேடையை அடையும் வரை போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.