Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : இப்படி ஒரு பிரின்சிபல் இருந்தால் யார் தான் ஸ்கூலுக்கு லீவு போடுவாங்க.. வைரலாகும் கியூட் வீடியோ!

Headmaster Plays with Students | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு வரும் மாணவர்களுடன் உற்சாகமாக விளையாடும் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : இப்படி ஒரு பிரின்சிபல் இருந்தால் யார் தான் ஸ்கூலுக்கு லீவு போடுவாங்க.. வைரலாகும் கியூட் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Aug 2025 21:28 PM

மாணவர்களுக்கு ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்லும் வகையில் பள்ளி நிர்வாகங்கள் சார்பிலும், அரசு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த தலைமை ஆசிரியர் மிகவும் அன்புடன் மாணவர்களுடன் நடந்துக்கொள்ளும் நிலையில், பலரும் அதனை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பள்ளி மாணவர்களுடன் உற்சாகமாக விளையாடும் தலைமை ஆசிரியர்

முன்பெல்லாம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கே மிகவும் அச்சப்படுவார்கள். அப்போது இருந்த வகுப்பறை சூழல், ஆசிரியர்களின் கண்டிப்பு ஆகியவற்றுக்கு பயந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் அழுது அடம் பிடிப்பர். இந்த நிலையில் தான் மாணவர்கள் மன மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் வகையில் அரசும், பள்ளி நிர்வாகங்களும் பல்வேறு வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தான் பள்ளி மாணவர்களுடன் விளையாடும் தலைமை ஆசிரியரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : இந்தியாவை விட்டு செல்ல மனமில்லாமல் அழுத வெளிநாட்டு பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Zac Bauermaster (@zbauermaster)

இணையத்தில் வைரலாகி வரும்  அந்த வீடியோவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வரும் குழந்தைகளை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். அதாவது குழந்தைகளுடன் கை குலுக்குவது, ஹை ஃபை கொடுப்பது, உற்சாகமாக நடனமாடுவது உள்ளிட்ட செயல்களை செய்கிறார். அதனை பார்க்கும் மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தலைமை ஆசிரியருடன் விளையாடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : துபாயின் சாலையில் ஓடிய மனித வடிவிலான ரோபோட்.. வியந்து பார்த்த பொதுமக்கள்!

வைரல் வீடியோ குறித்து பதிவிட்ட தலைமை ஆசிரியர்

ஒருவரை நாம் எப்படி வரவேற்கிறோம் என்பதுதான் ஒரு  உறவை வலுவடைய செய்யும் முக்கிய காரணியாக அமைகிறது. பள்ளிகள் மாணவர்கள் இருக்க வேண்டிய இடம். மகிழ்ச்சியாக இருப்பதற்கு மறந்துவிட கூடாது என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரவலான விமர்சனங்களை பெற்று வருகிறது.