Viral Video : தந்தையை திருமணம் செய்த பெண்?.. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ!
Woman Claims That She Married Her Father | இந்திய கலாச்சாரத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை திருமணம் செய்துக்கொள்வது குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இளம் பெண் ஒருவர் தான் தனது தந்தையை திருமணம் செய்துக்கொண்டதாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுமக்கள் மத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் அவர்கள் தங்களது வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளையும், தங்களை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிடுகின்றனர். பிறந்த நாள் கொண்டாட்டம், திருமணம் உள்ளிட்ட வீடியோக்களை அவர்கள் இணையத்தில் பகிர்கின்றனர். அந்த வகையில் இளம் பெண் ஒருவருக்கு நடந்த திருமணம் குறித்து விடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. காரணம், அந்த வீடியோவில் இருக்கும் பெண் தனது தந்தையை திருமணம் செய்துக்கொண்டதாக கூறுகிறார். இந்த வீடியோ மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த சம்பவம் உண்மையா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தந்தையை திருமணம் செய்துக்கொண்ட மகள்? – இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் தனது தந்தையை திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்தியாவை பொருத்தவரை தாய், தந்தைகள் பிள்ளைகளை திருமணம் செய்துக்கொள்வது கலாச்சார சீர்கேடாக உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இது மன்னிக்க முடியாத குற்றமாகவும் உள்ளது. இத்தகைய சூழலில் அந்த பெண் தனது தந்தையுடன் திருமணம் செய்துக்கொண்டதாக கூறியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.




இதையும் படிங்க : வீட்டை சூழந்த வெள்ள நீர்.. பால் ஊற்றி, மலர் தூவி வரவேற்ற காவலர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசும் இளம் பெண், சேலை கட்டி கழுத்தில் தாலி, தலையில் குங்குமத்துடன் சில விஷயங்களை கூறியுள்ளார். அதாவது, “இவர் எனது தந்தை. இப்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துக்கொண்டதை இந்த உலகிற்கு காட்டுகிறோம் என்று கூறியுள்ளார். அப்போது அந்த வீடியோவில் மற்றொரு நபர் இது குறித்து உங்களுக்கு அவமானமாக இல்லையா என கேட்கிறார். அதற்கு அந்த பெண், எங்களுக்கு பின்னால் பேசியவர்களுக்கு நாங்கள் பதில் அளித்துவிட்டோம் என கூறுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : பூனை என நினைத்து சிறுத்தையை துரத்திய நாய்கள்.. வைரலாகும் சிசிடிவி காட்சி!
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ உண்மையானதா?
அனைவரும் நினைக்கும்படி இது உண்மையான வீடியோ அல்ல. இந்த வீடியோவிலே இது நகைச்சுவைக்காக தயாரிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.