அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்ற நபர்.. விடாமல் துரத்திய யானை.. வைரல் வீடியோ!
Elephant Chases Tourist | யானைகள் அதிக உணர்திறன் மிக்க விலங்குகள் என்பதால் அவற்றுக்கு தங்களை தொந்தரவு செய்வது பிடிக்காது. இதன் காரணமாக ஆத்திரமடையும் யானைகள் மனிதர்களை துறத்தும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறும். அந்த வகையில், சுற்றுலா பயணி ஒருவரை யானை துறத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் காடு மற்றும் மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். இவ்வாறு செல்வதால் வனவிலங்குகள் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. அதிலும் குறிப்பாக யானை உள்ளிட்ட அதிக உணர்திறன் கொண்ட விலங்குகள் அதனை ஒருபோதும் விரும்புவதில்லை. அதையும் மீறி புகைப்படம் எடுக்க செல்லும் பொதுமக்களை யானைகள் தாக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், புகைப்படம் எடுக்க முயன்றவரை யானை ஒன்று துரத்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
புகைப்படம் எடுக்க முயன்றவரை துரத்திய யானை
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்து அனுப்புவர். சில பொதுமக்கள் அவற்றை கடைபிடித்தாலும், சில பொதுமக்கள் அதை தங்களது காதுகளில் வாங்கிக்கொள்வதில்லை. அந்த வகையில் எச்சரிக்கையை மீறி யானையை புகைப்படம் எடுக்க முயன்ற நபரின் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : சிறுத்தைக்கு ராக்கி கட்டிய பெண்?.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!
இணையத்தில் வைரலாகும் யானையின் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் யானை ஒன்று சாலையின் நடுவே நின்றுக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், யானையின் இரு பக்கங்களிலும் சுற்றுலா பயணிகளை தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அமைதியாக காத்திருக்கின்றனர். அப்போது திடீரென ஒரு நபர் யானைக்கு அருகே சென்று புகைப்படம் எடுக்க முயற்சி செய்கிறார். புகைப்படம் எடுக்கும்போது செல்போனில் இருந்து வெளிபட்ட ஒளி, யானையை ஆத்திரப்படுத்திய நிலையில், அந்த யானை புகைப்படம் எடுத்தவரை விரட்ட தொடங்குகிறது.
இதையும் படிங்க : Viral Video : துபாயின் சாலையில் ஓடிய மனித வடிவிலான ரோபோட்.. வியந்து பார்த்த பொதுமக்கள்!
மிகவும் ஆக்ரோஷமாக யானை துரத்தியதை கண்டு அதிர்ந்துபோன அந்த நபர் தப்பித்து விடலாம் என ஓடுகிறார். ஆனால், அவர் ஓட முடியாமல் சாலையில் விழுந்துவிடுகிறார். அப்போதும் விடாத அந்த யானை கீழே விழுந்த அந்த நபரின் மீது ஏறி நிற்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், யானைகளை துன்புறுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.