Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : சிறுத்தைக்கு ராக்கி கட்டிய பெண்?.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!

Woman Ties Rakhi to Leopard | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெண் ஒருவர் சிறுத்தைக்கு ராக்கி கட்டும் வீடியோ வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : சிறுத்தைக்கு ராக்கி கட்டிய பெண்?.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Aug 2025 17:50 PM

இந்தியா முழுவதும் நேற்றைய (ஆகஸ்ட் 09, 2025) தினம் ராக்கி (Rakhi) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ராக்கியில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் பெண் ஒருவர் சிறுத்தைக்கு ராக்கி கட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தை தன்வசம் இழுத்த இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிறுத்தைக்கு ராக்கி கட்டிய பெண் – வைரல் வீடியோ

நேற்றைய (ஆகஸ்ட் 09, 2025) தினம் இந்தியா முழுவதும் ராக்கி பண்டிகை கொண்டாடப்பட்டது. ராக்கி பண்டிகையின் போது சகோதரிகள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டி விடுவர். அதற்கு சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்கு பரிசு பொருட்களை வழங்குவர். அவ்வாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என பெரும்பாலானோர் தங்களது சகோதரிகள் உடன் ராக்கி கொண்டினர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக தொடங்கிய நிலையில், பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ராக்கி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : துணிச்சலாக எதிர்த்த மாடு.. வேட்டையாட வந்த சிறுத்தை தலைதெறிக்க ஓடியது!

இணையத்தில் வைரலாகும் சிறுத்தைக்கு ராக்கி கட்டும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் முட்புதரின் அருகே சிறுத்தை ஒன்று நின்றுக்கொண்டு இருக்கிறது. அதன் அருகில் சில பொதுமக்கள் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அப்போது பெண் ஒருவர் சிறுத்தையின் காலில் ராக்கி கட்டுகிறார். இவை அனைத்தும் அந்த கூட்டத்தில் நிற்கும் நபர் ஒருவர் வீடியோ பதிவு செய்கிறார். அந்த பெண் ராக்கி கட்டி முடிக்கும் வரை அந்த சிறுத்தை அப்படியே அசையாமல் நின்றுக்கொண்டு இருக்கிறது.

இதையும் படிங்க : சிங்கத்துடன் போட்டோ எடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி – வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்தியா எவ்வளவு சகோதரத்துவம் மிக்க நாடு என்பதை இதன் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு சிலர் கிண்டலாக கருத்துக்களை பதிவிட்டு இருந்தாலும் சிலர் அது உண்னையான சிறுத்தை இல்லை என கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.