Viral Video : துணிச்சலாக எதிர்த்த மாடு.. வேட்டையாட வந்த சிறுத்தை தலைதெறிக்க ஓடியது!
Cow Saving Another Cow | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் மாடு ஒன்றை வேட்டையாட முயன்ற சிறுத்தையை மற்றொரு மாடு விரட்டி அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

தற்போதைய காலக்கட்டத்தை பொருத்தவரை பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், உலகில் எந்த மூலையில் ஏதேனும் அசாத்தியாமான மற்றும் ஆச்சர்யமான சம்பவங்கள் நடைபெற்றாலும் அது உலகிறிகு மிக விரைவில் தெரிய வந்துவிடும். அந்த வகையில், மாடு ஒன்றை சிறுத்தை தாக்க முயற்சி செய்யும் நிலையில், மற்றொரு மாட்டின் துணிச்சலான செயலால் அந்த மாடு உயிர் தப்பும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
சிறுத்தையை விரட்டி அடித்த மாடு
நம்முடைய எதிரி எவ்வளவு பெரிய வளிமையாக இருந்தாலும், துணிச்சலாக எதிர்க்கும் திறன் கொண்டு இருந்தால் மிக எளிதாக எந்த வித சவாலையும் முறியடித்துவிடலாம். அந்த வகையில், தான் இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ உள்ளது. பொதுவாக சிறுத்தையை விட மாடுகள் வலிமை குறைந்தது என்பதால் அவற்றை சிறுத்தைகள் மிக எளிதாக வேட்டையாடிவிடும். அந்த வகையில் மாடு ஒன்றை வேட்டையாட நினைத்த சிறுத்தையை மற்றொரு மாடு விரட்டி அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இணையத்தில் வைரலாகும் வீடியோ
मेरी प्यारी मां!
गाय के बछड़े को गर्दन से पैंथर ने दबोचा तो बचाने मां दौड़ी। फिर क्या था, खुद देखिए।
📍 बाली, पाली pic.twitter.com/K9MVH7qqKm— Arvind Sharma (@sarviind) August 1, 2025
இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் மாடு ஒன்று சாலையில் நின்றுக்கொண்டு இருக்கிறது. அதற்கு அருகில் அடர்ந்த புதர் உள்ளது. இந்த நிலையில், திடீரென புதரில் இருந்து வெளியே வரும் சிறுத்தை மாட்டின் தொண்டையை கடிக்கிறது. சிறுத்தை தனது முழு வலிமையையும் பயன்படுத்தி, மாட்டை புதருக்குள் இழுத்துச் செல்ல முயற்சி செய்கிறது. இதனை பார்த்த மற்றொரு மாடு, பயப்படாமல் மிகவும் தைரியமாக அந்த சிறுத்தையை விரட்டுகிறது. அதனை கண்ட சிறுத்தை அங்கிருந்து பயந்து புதருக்குள் ஓடி மறைகிறது. இவை அனைத்தும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரில் இருந்து ஒருவரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : எனக்கு ஏன் சீட் கொடுக்கல? சட்டென பெண்ணை அறைந்த நபர்.. ஏர்போர்டில் களேபரம்!
இந்த வீடியோவை அந்த நபர் இணையத்தில் பதிவிட்ட நிலையில், அது மிக வேகமாக வைரலாக தொடங்கியுள்ளது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.