Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : தண்ணீர் குட்டையில் உல்லாசமாக நீராடிய புலி குட்டிகள்.. கண் இமைக்காமல் காவல் காத்த தாய் புலி!

Mother Tiger Protects Cubs | சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகள் தங்களது குட்டிகள் குறித்து மிகுந்த கவனத்துடன் செயல்படும். அந்த வகையில், தண்ணீர் குட்டையில் நீராடும் புலி குட்டிகளை அதன் தாய் உன்னிப்பாக கண்காணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : தண்ணீர் குட்டையில் உல்லாசமாக நீராடிய புலி குட்டிகள்.. கண் இமைக்காமல் காவல் காத்த தாய் புலி!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Aug 2025 23:13 PM IST

வன விலங்குகளில் புலி, சிங்கம் உள்ளிட்டவை மிகவும் தந்திரமானவை. அவை எப்போது விழிப்புடன் செயல்படும். அந்த வகையில் தாய் புலி ஒன்று தண்ணீர் குட்டையில் நீராடிக்கொண்டு இருக்கும் தனது குட்டிகளை மிகவும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் கண்காணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் இணைய வாசிகள் பலர், தாய்மையின் மகத்துவம் குறித்தும், புலியின் பாசம் குறித்தும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தண்ணீர் குட்டையில் உல்லாசமாக நீராடிய புலி குட்டிகள்

மனிதர்கள் மட்டுமன்றி விலங்கு இனத்திலும் தாய் எப்போதும் தனது குழந்தைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டு இருக்கும். மனிதர்களை விடவும் விலங்குகள் தங்களது குட்டிகள் மீது எப்போது கவனம் செலுத்தும். அவற்றுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்பட்டு விடாமல் கண்ணும், கருத்துமாய் பாதுகாக்கும். அந்த வகையில், தண்ணீர் குட்டையில் உல்லாசமாக நீராடும் புலி குட்டிகளை அவற்றின் தாய் உன்னிப்பாக கவனிக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : சிறுவர்களை துரத்திய தெரு நாய்.. ஹீரோ என்ட்ரி கொடுத்து காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்!

இணையத்தில் வைரலாகி வரும் புலியின் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் வனபகுதியின் மையத்தில் உள்ள தண்ணீர் குட்டை ஒன்றில் சில புலி குட்டிகள் குளித்துக்கொண்டு இருக்கின்றன. அப்போது அந்த குட்டையின் மீது இருக்கும் பாறை ஒன்றின் மீது அமர்ந்துக்கொண்டு தாய் புலி தனது குட்டிகளுக்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டு விட கூடாது என்பது போல உன்னிப்பாக கண்காணிக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : சுதந்திர தினத்தில் தேசிய விலங்கை பின்தொடரும் தேசிய பறவை – வைரல் வீடியோ

வீடியோ குறித்து பதிவிட்ட வனத்துறை அதிகாரி

இந்த வீடியோ குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா, தாய் புலியின் கவனம் எப்போது தனது குட்டிகளை விட்டு விலகாது என்று பதிவிட்டுள்ளார்.