Viral Video : சிறுவர்களை துரத்திய தெரு நாய்.. ஹீரோ என்ட்ரி கொடுத்து காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்!
Hero Dog Saves Kids | குழந்தைகளை, சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை நாய்கள் துரத்தும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் சிறுவர்களை தெரு நாய் துரத்தி செல்லும் நிலையில், ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று சிறுவர்களை காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமீப காலமாகவே நாய்கள் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சிறுவர்களை துரத்திச் சென்ற தெரு நாயை, ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று தடுத்து நிறுத்தும் வீடியோ சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் பலரும், ஒரு ஹீரோவை போல அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் செயல்பட்டடதாக கருத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிறுவர்களை தெரு நாயிடம் இருந்து காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்
சாலையில் நடந்துச் செல்லும் பொதுமக்கள், விளையாடும் சிறுவர்கள் என பலரையும் நாய்கள் துரத்தி கடிக்கும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். தெரு நாய்க்களின் தொந்தரவு மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக அவற்றை ஒரே இடத்தில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சிறுவர்களை துரத்தி செல்லும் நாயிடம் இருந்து குழந்தைகளை ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : கிரீன் சிக்னலுக்காக காத்திருந்து சாலையைக் கடந்த மான் – வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் நாயின் வீடியோ
In Rishikesh, A dog jumped like a superhero to save children from another dog.
pic.twitter.com/IwN1FUZgrN— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 9, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சிறுவர்கள் சிலர் சாலையில் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றனர். அவர்களை தெரு நாய் ஒன்று துரத்துவதால் அவர்கள் வேகமாக ஓடுகின்றனர். அதே தெருவில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று அமர்ந்துக்கொண்டு இருக்கிறது. அது சிறுவர்களை நாய் துரத்திக்கொண்டு ஓடுவதை கண்டு உடனடியாக வீட்டின் தடுப்பு சுவரை தாண்டி குதித்து தெரு நாயை துரத்த தொடங்குகிறது. அதனை கண்ட சிறுவர்கள் அமைதியாக சாலையில் நின்றுவிடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : இந்திய தெருக்களை சுத்தப்படுத்தும் ஸ்வீடன் நாட்டு இளைஞர்: வைரல் வீடியோ
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சில சமயங்களில் இப்படிப்பட்ட பாதுகாப்பான செல்லப்பிராணிகள் அவசியமாகின்றன என்று ஒருவர் கருத்து பகிர்ந்துள்ளார்.