Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுதந்திர தினத்தில் தேசிய விலங்கை பின்தொடரும் தேசிய பறவை – வைரல் வீடியோ

Independence Day : இந்தியாவில் 79வது சுதந்திர தினம் கொண்டாப்படும் வேளையில் இந்தியாவின் தேசிய விலங்கான புலியும், தேசிய பறவையான மயிலும் இடம்பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து வீடியோ பகிர்ந்த வனப் பாதுகாவலர் இது சுதந்திரன பரிசு என குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தில் தேசிய விலங்கை பின்தொடரும் தேசிய பறவை – வைரல் வீடியோ
சுதந்திர தினத்தில் வைரலாகும் வீடியோ
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Aug 2025 22:13 PM

இந்தியாவில் 79வது சுதந்திர தினத்தை (Independence Day) ஆகஸ்ட் 15, 2025 அன்று மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில் இந்தியாவின் தேசிய விலங்கையும் தேசியப் பறவையையும் ஒரே பிரேமில் காட்டும் ஒரு அரிய காட்சி நெட்டிசன்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சுதந்திர தினத்திற்காக இந்தியர்களுக்கு இயற்கை வழங்கிய பரிசு என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தியாவின் தேசிய சின்னங்களான புலியும், மயிலும் ஒரு தனித்துவமான காட்சியில் ஒன்றாகக் காணப்படுகின்றன. இந்த வீடியோவில் மயில் ஒன்று மெதுவாக நடந்து செல்ல, அதன் பின்னால் புலி (Tiger) மெதுவாக நடந்து செல்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்தவர் பின்னணியில் தேசிய கீதத்தின் இசையை ஒலிக்க விட்டிருக்கிறார்.

ஒரே வீடியோவில் தேசிய விலங்கும் தேசிய பறவையும்

இது போன்ற தருணங்கள் மிகவும் அரிதானவை. நாடு தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் இந்த வீடியோ சிறப்பு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. புலி வலிமை மற்றும் தைரியத்தின் சின்னம். மயில் பணிவு மற்றும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கும் குணங்கள் இவை. இந்த காணொளியை ராகேஷ் பட் பதிவு செய்தார். பின்னர், தலைமை வனப்பாதுகாவலர் (IFS) டாக்டர் பி.எம். தகாதே இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். “ஒரு அற்புதமான காணொளி, நமது தேசிய விலங்கு மற்றும் தேசிய பறவை ஒரே வீடியோவில் ஒன்றாக இடம் பெற்றிருப்பது ஆச்சரியங்களில் ஒன்று. இதுகுறித்து தகாதே தனது பதிவில் இந்தியாவின் தேசப்பக்தி மிக்க உணர்வின் சரியான சின்னம்.” அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : சிங்கத்துடன் போட்டோ எடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி – வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

 

இதையும் படிக்க : பூனை என நினைத்து சிறுத்தையை துரத்திய நாய்கள்.. வைரலாகும் சிசிடிவி காட்சி!

காட்டில் புலியும் மயிலும் ஒன்றாக இருப்பதைப் பார்ப்பது கடினம். இந்த காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியப்படுகிறார்கள். புலி மயிலின் பின்னால் அமைதியாக நடந்து செல்கிறது. இது ஒரு அற்புதமான தருணத்தை உருவாக்குகிறது. “என்ன ஒரு அரிய மற்றும் அழகான காட்சி. இந்த சுதந்திர தினத்தில் இந்தியாவின் சிறந்த இயற்கை பாரம்பரியத்திற்கு ஒரு உண்மையான அஞ்சலி” என்று ஒரு நெட்டிசன் எழுதினார்.

“இந்தக் காட்சி (இப்போதைக்கு) எவ்வளவு அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது” என்று மற்றொரு பயனர் எழுதினார். இந்த அரிய காட்சி கொண்டாட்டங்களை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்றியதாக பல நெட்டிசன்கள் பதிவிட்டனர்.