Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞரை திடீரென தாக்கிய புலி.. அதிர்ச்சியை ஏற்படுத்தும் பகீர் வீடியோ!

Indian Tourist Attacked by Tiger in Thailand Wildlife Park | உலக நாடுகளில் உள்ள சில பூங்காக்களில் புலி, சிங்கம் உள்லிட்ட வன விலங்குகளுடன் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், புகைப்படம் எடுக்க இந்திய இளைஞர் ஒருவரை புலி மிக கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞரை திடீரென தாக்கிய புலி.. அதிர்ச்சியை ஏற்படுத்தும் பகீர் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 May 2025 13:25 PM

தாய்லாந்து, மே 30 : தாய்லாந்தில் (Thailand) உள்ள ஒரு பூங்காவில் புலியுடன் புகைப்படம் எடுக்க முயன்ற இந்தியர் ஒருவரை அந்த புலி தாக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் உள்ள பூங்காக்களில் இவ்வாறு புலி, சிங்கள் உள்ளிட்ட வன விலங்குகள் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுக்க அனுமதி வழங்கப்படும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சுற்றுலா பயணியை புலி தாக்கியது எப்படி, அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வன விலங்குகளுடன் புகைப்படம் எடுக்க அனுமதிக்கும் பூங்காக்கள்

இந்தியாவில் உள்ள வன விலங்கு பூங்காக்களில் விலங்குகள் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு காட்சி படுத்தப்படும். இவ்வாறு வன விலங்குகள் பாதுகாப்பான முறையில் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்படுவதால், யாருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் உள்ளது. ஆனால், தாய்லாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளில் வன விலங்குகள் பொதுமக்களின் பார்வைக்காக திறந்தவெளி பகுதியில் வைக்கப்படுகின்றனர். யானை, சிங்கம், புலி, கரடி, குரங்கு என பல விலங்குகள் இவ்வாறு திறந்தவெளி பகுதிகளில் வைத்து காட்சிப்படுத்தப்படும் நிலையில், அவற்றை தொட்டு பார்க்கவும் அவற்றுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் புலியுடன் புகைப்படம் எடுப்பதற்காக அதனை அழைத்து வருகிறார். புலியின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றை பிடித்துக்கொண்டு அந்த நபர் புலியை அழைத்து வரும் நிலையில், அவருடன் பாதுகாப்புக்காக பாதுகாவளர் ஒருவரும் வருகிறார். அப்போது புகைப்படம் எடுப்பதற்காக அவர்கள் நின்ற நிலையில், திடீரென அந்த புலி அந்த இளைஞரை தாக்க தொடங்குகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பாதுகாவளர் புலியிடம் இருந்து அந்த இளைஞரை எப்படியாவது காப்பாற்ற வேண்டு  என போராடுகிறார்.

ஆனால், புலியோ விடாது அந்த இளைஞரை தாக்குகிறது. இதனால் பயத்திலும், வலி தாங்க முடியாமலும் அந்த இளைஞர் அலறி துடிக்கிறார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வீடியோ எடுக்கும் நபரும் அந்த இளைஞரை காப்பாற்ற முயற்சி செய்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. புலி தாக்கிய அந்த இளைஞருக்கு என்ன ஆனது என்று எந்த தகவலும் தெரியாத நிலையில், புலியின் கையில் சிக்கிய இளைஞர் அலறி துடிக்கும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இங்கு குறிப்பிடத்தக்கது.