Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2 மாத குழந்தைக்கு அவசர தடுப்பூசி… உயிரைப் பணயம் வைத்து நர்ஸ் செய்த சம்பவம்.. குவியும் பாராட்டு!

Nurse Risks Life | இமாச்சல பிரதேசத்தில் இரண்டு மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற அவசரமாக மருந்து தேவை வேண்டும் என்று வந்த அழைப்பின் பேரில் மிகவும் ஆபத்தான ஆற்றை கடந்து குழந்தைக்கு மருந்தை எடுத்துச் சென்ற செவிலியரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 மாத குழந்தைக்கு அவசர தடுப்பூசி… உயிரைப் பணயம் வைத்து நர்ஸ் செய்த சம்பவம்.. குவியும் பாராட்டு!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Aug 2025 08:05 AM

இமாச்சல பிரதேசம், ஆகஸ்ட் 24 : இமாச்சல பிரதேசத்தில் (Himachal Pradesh) இரண்டு மாத குழந்தையின் உயிரை காப்பாற்றக்கூடிய ஊசியை தனது உயிரை பணயம் வைத்து எடுத்து செல்லும் செவிலியரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் மிகவும் ஆபத்தான ஆற்றை கடந்து, குழந்தைக்கு மருந்தளிக்க செல்கிறார். செவிலியரின் உயர்ந்த சேவை நோக்கத்தை பாரட்டி பலர் கருத்து தெரிவித்தாலும், அது மிகவும் ஆபத்தான செயல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், குழந்தையை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்து செல்லும் செவிலியர் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆபத்தான ஆற்றை கடந்து குழந்தையின் உயிரை காப்பாற்ற செல்லும் செவிலியர்

இமாச்சல பிரதேசம், மந்தி மாவட்டத்தை சேர்ந்த செலிவியர் ஒருவர் 2 மாத குழந்தையை காப்பாற்ற மிகவும் ஆபத்தான ஆற்றை கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுதார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செளஹர்காட்டியில் நடைபெற்ற இந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், கமலா என்ற செவிலியர் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆபத்தான ஆற்றை கடந்து செல்கிறார். அதற்காக அவர் ஒரு பாறையில் இருந்து மற்றொரு பாறைக்கு தாவி தாவி செல்கிறார். மிகவும் ஆபத்தான முறையில் அவர் ஆற்றை கடக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : பாம்பை மண்புழு போல கையில் வைத்து விளையாடும் சிறுவன் – வைரல் வீடியோ

இணையத்தில் வைரலாகும் செவிலியரின் துணிச்சலான வீடியோ

இது குறித்து கூறியுள்ள கமலா, சுதார் பஞ்சாயத்தில் உள்ள ஆரம்ப சுகாதார் மையத்தில் இருந்து இரண்டு மாத குழந்தைக்கு உயிர் காக்கும் ஊசி தேவை உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றுக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார். அந்த பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அந்த ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் அடித்துச் சென்ற நிலையில், அத்தகைய ஆபத்தான முறையில் அவர் பாலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தான் தினமும் இவ்வாறு பணிக்கு செல்வதாகவும், சில சமயங்களில் 4 கிலோ மீட்டர் தூரம் வரை மலை ஏறி செல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.