Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாம்பை மண்புழு போல கையில் வைத்து விளையாடும் சிறுவன் – வைரல் வீடியோ

Social Media Buzz: பாம்பு என்றால் படையே நடுங்கும் என சொல்வார்கள். ஆனால் இங்கே ஒரு குழந்தை பாம்பை ஏதோ மண் புழு போல கையில் வைத்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது. பலரும் சிறுவனின் பெற்றோருக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.

பாம்பை மண்புழு போல கையில் வைத்து விளையாடும் சிறுவன் – வைரல் வீடியோ
பயமில்லாமல் பாம்புடன் விளையாடும் சிறுவன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Aug 2025 22:29 PM

சமூக ஊடகங்களில் (Social Media) பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். குறிப்பாக சிறு குழந்தைகளின் வீடியோக்கள் நெருப்பு போல வைரலாகின்றன. சில நேரங்களில் குழந்தைகளின் குறும்புத்தனங்கள் மக்களை ரசிக்க வைக்கின்றன.  குழந்தைகளின் குறும்புகளை ரசிக்காதவர்கள் தான் யார் இருக்க முடியும். குழந்தைகளுக்கு நேற்றைய பற்றிய கவலையில்லை. நாளைகள் பற்றி பெரிதாக யோசிப்பது இல்லை. அவர்கள் நிகழ்காலத்தில் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்கிறார்கள். அதனால் தான் நம்மில் பலரும் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என நினைக்கிறோம். ஆனால் இங்கே ஒரு சிறுவன் பாம்பை வைத்து விளையாடும் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். சாதாரண மக்களால் என்ன செய்ய முடியும் பயந்து ஓடிவிடுவார்கள். காரணம் பாம்பு மிகவும் கொடிய விஷம் கொண்டது, அது குடித்தால் உயிர் போய்விடும் என நமக்கு தெரியும். ஆனால் இது எதுவும் தெரியாத குழந்தை முன் பாம்பு வந்தால் என்ன நடக்கும், அது ஏதோ விளையாட்டு பொருள் என நினைத்து விளையாடத் தொடங்குவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இங்கே நடந்திருக்கிறது. சிறுவன் ஒருவன் தன் முன் போகும் பாம்பின் வாலை இழுத்து அதனை பொம்மை போல கருதி அதனுடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைய செய்திருக்கிறது.

இதையும் படிக்க : சுதந்திர தினத்தில் தேசிய விலங்கை பின்தொடரும் தேசிய பறவை – வைரல் வீடியோ

பாம்பை கண்டு பயப்படாமல் விளையாடும் சிறுவன்

 

வைரலாகும் அந்த வீடியோவில் ஒரு சிறுவனை நோக்கி பாம்பு வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் அந்த சிறுவனும் பாம்பைக் கண்டு துளியும் பயப்படவில்லை. பாம்பின் மோசமான செயல்கள் குறித்து யாரும் அந்த சிறுவனிடம் சொல்லவில்லை போல. மாறாக ஒரு குச்சியின் உதவியுடன் பாம்பின் வாயை அழுத்தி, மற்றொரு கையால் அதன் வாலை பிடித்து மேலே தூக்குகிறான். இப்படி செய்யும்போது அவன் முகத்தில் துளியும் அச்சமில்லை. பாம்பை ஏதோ மண்புழுவை வைத்து விளையாடுவதைப் போல செய்கிறான். வீடியோ எடுத்தவரும் அந்த சிறுவனிடம் இருந்த பாம்பை காப்பாற்றவோ அல்லது பாம்பு குறித்து அறிவுறுத்தவோ செய்யவில்லை. மாறாக சிறுவனை ஊக்கப்படுத்துவதைப் போல நடந்துகொள்கிறார்.

இதையும் படிக்க : பாட்டு பாடும் பாதுகாவலர்.. செல்லவிடாமல் இருக்கி பிடித்துக்கொண்ட யானை.. கியூட் வீடியோ!

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் சிறுவனின் நிலை குறித்து தங்களின் கவலையை பதிவு செய்துள்ளனர். அதில் ஒருவர், அந்த சிறுவன் கையில் வைத்திருக்கும் பாம்பு, தாக்கினால் நொடிகளில் உயிர் போய்விடும். சிறுவனின் பெற்றோர் எப்படி பாம்புடன் விளையாட அனுமதித்தார்கள் என தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். ஒரு சிலர் சிறுவனின் தைரியத்தை பாராட்டினர். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.