மலைப்பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற இளைஞர் – அடுத்த நடந்த ட்விஸ்ட்
Deadly Python Attack Video : சமூக வலைதளங்களில் டிரெண்டாவதற்காக இளைஞர்கள் அடிக்கடி சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வைரலாகும் ஒரு வீடியோவில் இளைஞர் ஒருவர் மலைபாம்பை கையில் பிடித்து முத்தம் கொடுக்க முயல, அடுத்த நொடியே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

சமூக வலைதளங்களின் (Social Media) வருகைக்கு பிறகு இளைஞர்கள் தங்களை ஹீரோவாக காட்ட பல சாகசங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சில நேரங்களில் அது அவர்களுக்கு எதிர்வினையாகிவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் (Instagram) வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் மலைப்பாம்பை தனது கையில் வைத்து, நான் தைரியமானவன் என நிரூபிக்க சாகசத்தில் ஈடுபடுகிறார். அடுத்த நொடி அவருக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. மலைப்பாம்பு மிகவும் ஆபத்தான உயிரினம் என்பது அனைவருக்கும் தெரியும். இது நினைத்தால் மனிதர்களையே விழுங்கும் அளவுக்கு வல்லமை படைத்தது. இந்த நிலையில் இளைஞர் ஒருவர் மலைப்பாம்புக்கு முத்தம் கொடுக்க முய அடுத்த நடந்தது தான் ஹைலைட்.
ஒரு மலைப்பாம்பு மனிதர்களைப் பிடித்து மூச்சுத் திணறடித்து பின்னர் அவர்களை உயிருடன் சாப்பிடும் அளவுக்கு வீரியம் கொண்டது. இருப்பினும், சிலர் இதுபோன்ற ஆபத்தான பாம்புகளுடன் விளையாடுவதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, தாங்கள் வீரமானவர்கள் என நிரூபிக்க முயல்கிறார்கள். சில நேரங்களில் அவர்களுக்கே அது எதிர்வினையாக முடிகிறது. இப்போது வைரலாகி வரும் இந்த வீடியோ அதற்கு ஒரு நல்ல உதாரணம். இதில், ஒரு மலைப்பாம்புக்கு முன்னால் தனது வீரத்தை நிரூபிக்க முயல அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.




பாம்புடன் விளையாடிய இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
View this post on Instagram
இதையும் படிக்க : மலைப்பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற இளைஞர் – அடுத்த நடந்த ட்விஸ்ட்
வைரலாகி வரும் வீடியோவில், ஒரு இளைஞர் கையில் மலைப்பாம்பைப் பிடித்துக் கொண்டு கேமரா முன் போஸ் கொடுப்பது போல் தெரிகிறது. அந்த இளைஞன் மலைப்பாம்பை தனது கையில் வைத்து பயமின்றி வேடிக்கை காட்டுகிறார். இருப்பினும், மலைப்பாம்பின் தலைக்கு அருகில் கொண்டு வந்து முத்தம் குடுக்க முயல்கிறார். அப்போது பாம்பு அவரது முகத்தை மிக விரைவாகத் தாக்கியது. அவர் சற்றும் எதிர்பாராத அளவுக்கு பாம்பின் தாக்குதல் இருந்தது. அந்த இளைஞனுக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையும் படிக்க : 16 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை மீட்ட வனத்துறை அதிகாரி – குவியும் பாராட்டு
இன்ஸ்டாகிராம் ஹேண்டில் ஸ்னேக்சேவர்ஸிலிருந்து பகிரப்பட்ட இந்த வீடியோ, இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மக்கள் கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சில நெட்டிசன்கள் இளைஞர்களின் கவனக்குறைவை கேள்வி எழுப்புகின்றனர். மற்றவர்கள் விலங்குகளுடன் விளையாடுவது ஆபத்தானது என்று கூறுகிறார்கள். ஒரு பயனர், “இது யாருக்கும் கிடைக்காத சிறந்த முத்தம்,” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார். “இளைஞர் தனக்குத் தகுதியானதைப் பெற்றார். இளைஞர்களின் நடத்தைக்கு எதிராக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், ரீல்களுக்காக இதுபோன்ற செயல்களைச் செய்வதன் மூலம் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.