Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வரதட்சணை கொடுமை – மகனின் கண்முன்னே பெண் எரித்துக்கொலை – கணவன் கைது

Greater Noida Horror : உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வரதட்சணை கொடுமையால் ஒரு பெண்ணன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் மகனின் கண்முன்னே நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

வரதட்சணை கொடுமை – மகனின் கண்முன்னே பெண் எரித்துக்கொலை – கணவன் கைது
கொலை செய்யப்பட்ட நிக்கியுடன் அவரது கணவர் விபின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Aug 2025 22:43 PM

திருப்பூரில் கடந்த ஜூலை, 2025 மாதம் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். கடைசியாக தன் தந்தைக்கு வாட்ஸ்அப்பில் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் அவரது மகன் கண்முன்னே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வரதட்சணைக் கேட்டு தொடர்ந்து கொடுமை

கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா அருகில் உள்ள சிர்சா என்ற கிராமத்தை சேர்ந்த விபின் என்பவருக்கும் நிக்கி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணமான 6 மாதத்தில் இருந்தே விபினின் குடும்பத்தினர் நிக்கியை கொடுமை செய்திருக்கின்றனர். இந்த நிலையில் நிக்கியிடம் ரூ.36 லட்சம் ரூபாய் கேட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்காத நிலையில் நிக்கியை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். மேலும் பணம் தரவில்லை என்றால் நிக்கியை கொன்று வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வேன் எனவும் விபின் மிரட்டியிருக்கிறார்.

இதையும் படிக்க : காதலுக்கு நோ சொன்ன பெண்… காருடன் ஏரியில் தள்ளிவிட்டு கொன்ற நபர்.. அதிர்ச்சி பின்னணி!

மகனின் முன்னிலையில் நடந்த கொடூரம்

கடந்த ஆகஸ்ட் 21, 2025 அன்று இரவு நிக்கியின் தலை முடியை பிடித்து இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விபினின் குடும்பத்தினர் நிக்கியின் முடியை பிடித்து இழுத்து செல்கின்றனர். பின்னர் அவர் மீது தீ வைக்கின்றனர். இந்த சம்பவம் நிக்கியின் கண்முன்னே நடக்கிறது. இந்த வீடியோவில் நிக்கியின் உடலில் யாரோ தீ வைக்கிறார்கள். இந்த நிலையில் எரியும் நிலையில் நிக்கி கீழே விழுகிறார். அப்போது யாரோ ஒருவர் அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.

சகோதரியின் சாட்சியம்

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நிக்கியின் சகோதரி காஞ்சன் காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்திருக்கிறார். அதில், என் கண்முன்னே எனது சகோதரியை அடித்து அவர் மீது தீ வைத்தனர். இது அவரது கண்முன்னே நடந்தது. நான் என்னால் முடிந்த வரை காப்பாற்ற முயன்றேன். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் இறந்துவிட்டார். எங்களுக்கு நீதி வேண்டும் என அவர் அழுதபடி கூறியிருக்கிறார்.

இதையும் படிக்க : கிரைம் திரில்லர் வெப் சீரீஸ் பார்த்து ஸ்கெட்ச்.. ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி!

இந்த சம்பவம் தொடர்பாக நொய்டாவின் கூடுதல் துணை கமிஷனர் சுதீர் குமார் பேசியதாவது, கடந்த ஆகஸ்ட் 21, 2025 அன்று மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு தகவல் வந்தது. தீக்காயம் அடைந்த பெண் ஒருவர் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்று எங்களுக்கு சொன்னார்கள். இந்த சம்பவத்தில் அவரது சகோதரியின் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கணவர் விபின் கைது செய்யப்பட்டுள்ளார். விபினின் குடும்பத்தினர் தற்போது தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.