சண்டிகரில் பால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – 30 பேர் பத்திரமாக மீட்பு
Gas Leak Scare: பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகே பால் தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர்.

பஞ்சாப் (Punjab) அருகே சண்டிகர் அருகே ஜல்லந்தரில் உள்ள பால் தொழிற்சாலையில் கடந்த ஆகஸ்ட் 25, 2025 அன்று திடீரென அமோனியா வாயு வெளியேறி மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த 30 தொழிலாளர்கள் பாதுகாப்பு மீட்கப்பட்டனர். ஜல்லந்தரில் உள்ள சர்ஜிக்கல் காம்ப்ளெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, தொழிற்சாலையில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட பணியாளர்களை மீட்டனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பணியாளர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு
அமோனியா வாயு உயிர் சேதம் ஏற்படவிருந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் துணிச்சலாக செயல்பட்டு பணியாளர்களை மீட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி மானிந்தர் சிங் தெரிவித்ததாவது, எங்கள் குழு ஏணிகள் மற்றும் கிரேடர்கள் பயன்படுத்தி தொழிற்சாலையில் சிக்கிய 30 பேரை மீட்டனர். எங்களுக்கு மாலை 5:15 மணிக்கு அனைப்பு வந்தது. உடனடியாக நாங்கள் நடவடிக்கையில் இறங்கினோம். தற்போது அந்த பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.
இதையும் படிக்க : கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெருநாய்கள்.. முகத்தில் 17 தையல்கள்!
தற்போது மீட்கப்பட்ட பணியாளர்கள் காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலை இருந்த பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அமோனியா வாயுவை கட்டுப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் வழங்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பிறகு அமோனியா வாயு வெளியேறியதற்கான காரணம் தெரியவரும். இதன் அடிப்படையில் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆவின் தொழிற்சாலையில் அமோனியா வாய கசிவு
கடந்த ஜூலை 12, 2025 அன்று விழுப்புரம் ஆவின் பால் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயு காற்றில் பரவி அருகில் வசித்தவர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஒருமணி நேரம் போராடி அமோனியா வாயு கசிவை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க : ஜன்னலுக்குள் சிக்கிய தலை.. இரவு முழுவதும் பள்ளியில் தவித்த சிறுமி!
அமோனியா வாயுவால் ஏற்படும் பாதிப்புகள்
அமோனியா வாயு பரவல் காரணமாக நுரையீரல் பகுதி கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் கண்களில் எரிச்சல், தோலில் அலர்ஜி போன்ற பிரச்னைகள் உருவாகலாம். நீண்ட நேரம் இந்த பாதிப்பை எதிர்கொள்ளும்போது ஆக்ஸிஜன் குறைவு காரணமாக உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.