தூங்கும் முன் சூடான பால் குடித்தால் என்ன நடக்கும்? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Warm Milk Before Bed : பால் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக இரவில் தூங்கும் முன் பால் குடிப்பதால் நல்ல தூக்கம் வரும் என மக்கள் நம்புகிறார்கள். அதன் பின்னால் உள்ள உண்மை என்ன என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இரவு நேரம் பொதுவாக பால் (Milk) குடிப்பது நல்ல தூக்கத்தை அளிக்கும் என மக்களால் நம்பப்படுகிறது. ஆயுர்வேதம் மருத்துவ நிபுணர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பால் குடிக்க பரிந்துரைக்கிறது. இந்த நேரத்தில், உடல் அமைதியாக மாறும். அந்த நேரம் பால் குடிப்பதால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் நன்கு உறிஞ்சப்படுகின்றன. பாலில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது மன அழுத்தத்தைக் (Stress) குறைக்கிறது. நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. பால் புரதம் மற்றும் கால்சியம் (Calcium) அதிகம் உள்ள பானமாகக் கருதப்படுகிறது. பலர் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் ஆயுர்வேதத்தின்படி, பசுவின் பால் வாத மற்றும் பித்த தோஷங்களை சரிசெய்கிறது. வலிமை, ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் அதிக நன்மைகளைப் பெற எப்போது பால் குடிக்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சிறந்த தூக்கத்தை வழங்கும்
பாலில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களான செரோடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. செரோடோனின் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. தூங்கும் நேரத்தில் மெலடோனின் உடல் செயல்பாடுகளை சீராக்க உதவுகிறது. பால் கால்சியத்தையும் வழங்குகிறது. இது தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன்களை உருவாக்க மூளை டிரிப்டோபனைப் பயன்படுத்த உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் ஒன்றாக உங்களுக்கு தூங்க உதவுகின்றன.
இதையும் படிக்க : வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? ஆச்சரியத் தகவல்!
தூங்கும் முன் பால் குடிப்பது உடல் ஓய்வெடுக்க சமிக்ஞை செய்கிறது. காலையில் எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் குடிப்பது உங்களுக்குப் புத்துணர்வைத் தருகிறது. மேலும், பால் குடிப்பது மன தளர்வுக்கு ஒரு பழக்கமாக மாறுகிறது. தூங்கும் முன் பால் குடிப்பது நன்றாக தூங்க உதவும் என்று பலர் கண்டறிந்துள்ளதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
இதையும் படிக்க : சாப்பிட்ட பின் செய்யக்கூடாத தவறுகள்: ஆரோக்கியத்தை பாதுகாக்க அறிய வேண்டியவை!
நினைவில் கொள்ள வேண்டியவை
- பால் சூடாகக் குடிப்பது நல்லது. சிறந்த நன்மைகளுக்காக நீங்கள் அதில் மஞ்சள் மற்றும் ஏலக்காயைச் சேர்க்கலாம்.
- பாலுடன் உப்பு மற்றும் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது அல்ல. அதே போல பழங்கள் கலந்து சாப்பிடும்போது செரிமான பிரச்சனைகள் அல்லது தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால்தான் எச்சரிக்கை தேவை.
- லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பாலை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
- அடிக்கடி சளி, இருமல் இருப்பவர்கள் குளிர்ந்த பால் குடிக்கக் கூடாது. அப்படிப்பட்டவர்கள் மசாலா பால் அல்லது மூலிகைகள் கலந்த பால் குடிக்கலாம்.