இட்லி, தோசை மாவு விற்று ரூ. 600 கோடி நிறுவனமாக வளர்ந்த ஐடி ஃபிரெஷ் – வளர்ச்சிக்கான காரணம் தெரியுமா?
From Batter to Billion : மக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு, விற்பனையை துவங்கினால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்பதற்கு ஐடி ஃபிரெஷ் நிறுவனம் மிகப்பெரும் உதாரணம். பெங்களூரு மக்களின் பரபரப்பான வாழ்க்கைையை புரிந்து கொண்ட முஸ்தபா, எளிமையாக இட்லி, தோசை மாவு விற்கும் நிறுவனத்தை துவங்கினார். இன்று அது ரூ.600 கோடி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அவரது வெற்றிக் கதையை விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2005 ஆம் ஆண்டு, கேரளாவைச் (Kerala) சேர்ந்த முஸ்தபா மற்றும் அவரது நான்கு உறவினர்களான ஷம்சுதீன், அப்துல் நாசர், ஜாஃபர், நுசாட் ஆகியோர் ரூ.50,000 முதலீட்டுடன் பெங்களூருவில் (Bengaluru)உள்ள 50 சதுரஅடி வீட்டில் குடிசைத் தொழிலாளாக ஐடி ஃபிரெஷ் ஃபுட் (iD Fresh Food) அரிசி, பருப்பு ஆகியவற்றை வாங்கி இட்லி மற்றும் தோசை மாவு தயாரித்து 20 கடைகளுக்கு வழங்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் தினம் ஒவ்வொரு கடைக்கும் 10 பாக்கெட்டுகள் வீதம் விநியோகிக்க தொடங்கியிருக்கின்றனர். விரைவிலயே அவர்கள் மாவு மக்களிடையே பிரபலமடையத் தொடங்கியிருக்கிறது. அதன் பின்னர் ரூ.6 லட்சம் செலவில் 800 சதுர அடி இடத்தில் இயந்திரங்களை அதிகரித்து பெரிய நிறுவனமாக மாற்றினர்.
அவர்களது பொருட்கள் பெங்களூரு முழுவதும் பிரபலமாகியிருக்கிறது. இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டில் ரூ.40 லட்சம் முதலீடு செய்து ஹோஸ்கோட் பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைத்தனர். மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டில் தனது கேரளாவில் உள்ள தங்களது சொத்துக்களை விற்றுவிட்டு ரூ. 30 லட்சம் கூடுதலாக பணம் திரட்டி இந்த நிறுவனத்தின் தினசரி தயாரிப்பு 2,000 கிலோக்கு உயர்ந்து, 300 கடைகளுக்கு விநியோகிக்கத் தொடங்கியது.
இதையும் படிக்க : விவசாயிகளை கோடீஸ்வரராக்கிய அமுல்… பால் புரட்சிக்கு வித்திட்ட ஹீரோ – யார் இந்த வர்கீஸ் குரியன்?
வளர்ச்சிக்கான காரணம்
சுவைக்காக எவ்வித கெமிக்கல்களையும் சேர்க்காமல் தூய்மைாக தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது. மேலும் இந்நிறுவனத்தின் மாவு மிகவும் சுவையானதாகவும் பயன்படுத்த ஏற்றதாகவும் இருந்திருக்கிறது. இதனையடுத்து வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெற்ற நிறுவனத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பெங்களூரு நகரின் பரபரப்பான வாழ்ககைக்கு ஏற்ற வகையில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இருந்திருக்கிறது.
இதையும் படிக்க : அருண் ஐஸ்கிரீம் டூ ஆரோக்கியா பால்…. கல்லூரி தேர்வில் தோற்றவர், வாழ்க்கையில் வென்ற கதை!
அதிகரித்த முதலீடுகள்
வெகு விரைவிலேயே அந்நிறுவனம் அசூர வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு Helion Venture Partners நிறுவனம் ரூ.35 கோடி முதலீடு செய்தது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டில் Premji Invest நிறுவனம் ரூ.170 கோடி முதலீட்டுடன் 25% பங்குகளை பெற்றது. இதன் மூலம் இந்த நிறுவனம் ரூ.600 கோடி நிறுவனமாக வளர்ந்தது.
இந்நிறுவனத்தின் தனித்துவமான பொருட்களான பரோட்டா மாவு, சட்னி ஆகியவை அதிக லாபம் ஈட்டி வருகிறது. குறிப்பாக சட்னியில் மட்டும் மாத வருமானம் ரூ.1.5 கோடி என்றும், இந்நிறுவனத்தின் ஸ்பெஷல் மாவு விற்பனை ரூ.1 கோடி என்றும், பரோட்டா மாவு விற்பனை மாத்துக்கு ரூ.50 லட்சம் என்றும் கூறப்படுகிறது.
iD Fresh, நபர்கள் மதிய உணவுக்கு எவ்வளவு இட்லி, தோசை மாவு வாங்குவார்கள் என்பதை கணிக்க ஒரு தனிப்பட்ட டேட்டா தொழில்நுட்ப மாடலை உருவாக்கியுள்ளது. இந்த மாடல் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் case study-ஆக கூட கற்பிக்கப்படுகிறது.”