Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விவசாயிகளை கோடீஸ்வரராக்கிய அமுல்… பால் புரட்சிக்கு வித்திட்ட ஹீரோ – யார் இந்த வர்கீஸ் குரியன்?

Amul’s Inspiring Journey : பசுமை இந்தியாவின் பால் புரட்சிக்கு அடித்தளமிட்டவர் டாக்டர்.வர்கீஸ் குரியன். விவசாயிகளின் வாழ்வை மாற்றிய அமுல் நிறுவத்தின் பின்னணியில் இருந்து செயலாற்றியவர். விவசாயிகளை ஒருங்கிணைத்து அமுல் நிறுவனத்தை உருவாக்கி மாபெரும் புரட்சி செய்திருக்கிறார். அமுல் நிறுவனத்தின் வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

விவசாயிகளை கோடீஸ்வரராக்கிய அமுல்… பால் புரட்சிக்கு வித்திட்ட ஹீரோ – யார் இந்த  வர்கீஸ் குரியன்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Jul 2025 19:35 PM

இந்தியாவின் பால் தொழில்துறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் அமுல்.(Amul) குஜராத் (Gujarat) மாநிலத்தின் ஆனந்த் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டுறவுக் கழகம், இன்று உலகளவில் பரந்து விரிந்த பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் நிறுவனமாக வளர்ந்துள்ளது. அமுல் தயாரிப்புகளை பயன்படுத்தாத மக்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக அமுல் ஐஸ்கிரீம் (Ice Cream) இந்திய அளவில் மிகவும் பிரபலமான பிராண்டாக இருந்து வருகிறது. இது மட்டும் அல்லாமல், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, பால் உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு அடைய செய்த பெருமையும் அமுல் நிறுவனத்தையே சேரும்.

அமுல் நிறுவன் உருவான விதம்

1946-ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் பால் விற்பனைக்காக இடைத் தரகர்களைச் சார்ந்திருந்தனர். அவர்கள் குறைந்த விலையில் பாலை வாங்கி, அதிக விலையில் விற்றனர். இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இதனை மாற்ற வேண்டும் என தீர்மானித்த டாக்டர் வர்கீஸ் குரியன் மற்றும் சூரபாய் பட்டேல் ஆகியோர் கூட்டுறவுக் கழகம் ஒன்றைத் தொடங்கினர்.  அதுவே ‘அமுல்’. அமுல் என்பது Anand Milk Union Limited என்பதின் சுருக்கமான வடிவம்.

இதையும் படிக்க : அருண் ஐஸ்கிரீம் டூ ஆரோக்கியா பால்…. கல்லூரி தேர்வில் தோற்றவர், வாழ்க்கையில் வென்ற கதை!

பால் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியனின் பங்கு

பின் வந்த டாக்டர் வர்கீஸ் குரியன், தனது அறிவும், அர்ப்பணிப்பும் மூலம் பால் உற்பத்தியாளர்களின் நிலையை உயர்த்தினார். Operation Flood என்ற திட்டத்தின் மூலம், இந்தியாவின் பால் உற்பத்தியில் ஒரு புரட்டியே ஏற்பட்டது. கடந்த 1970 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய பால் விநியோக திட்டமாகும். குஜராத்தின் ஆனந்த் என்ற ஊரில் துவங்கப்பட்ட  விநியோக மாடல் இந்தியா முழுவதும் பின்பற்றப்படுகிறது.

அமுல் நிறுவனத்தின் வெற்றியின் முக்கிய காரணிகள்

  • இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் கூட்டுறவு முறை. விவசாயிகள் சொந்தமாக பங்கு வைத்திருந்தனர்.
  • இதில் சிறந்த தரம் மற்றும் நவீன உற்பத்தி முறைகள் பின்பற்றப்படுகின்றன.
  • பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை வழங்கப்பட்டது.
  • இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு அதன் விளம்பரமும் முக்கிய காரணம். அமுல் கேர்ள் என்ற அந்த குழந்தையின் முகம் மக்களை வெகுவாக ஈர்த்தது.
  • அரசின் தலையீடுகள் இன்றி சுயமாக செயல்பட்டது.

இதையும் படிக்க  : பைக் துடைத்தவரை பார்த்தவருக்கு கிடைத்த ஐடியா- ரூ.1.3 கோடி ஆண்டு வருமானம் – பைக் பிளேஸர் நிறுவனர் கேசவ் ராய் வெற்றி பயணம்

அமுல் நிறுவனத்தின் இன்றைய நிலை

  • 2024 ஆம் ஆண்டின் படி, அமுல் தினசரி 300 லட்சம் லிட்டர் பாலை சேகரிக்கிறது.

  • 3.6 கோடி பால் உற்பத்தியாளர்கள் அமுலுடன் இணைந்துள்ளனர்.

  • உலகின் மிகப்பெரிய பால் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

  • துபாய், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளிலும் அமுல் தனது பாதையை விரிவுபடுத்தியுள்ளது.