Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பைக் துடைத்தவரை பார்த்தவருக்கு கிடைத்த ஐடியா- ரூ.1.3 கோடி ஆண்டு வருமானம் – பைக் பிளேஸர் நிறுவனர் கேசவ் ராய் வெற்றி பயணம்

Spark Of Innovation : இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கான பாதுகாப்பு கவசமாக உருவாக்கப்பட்ட பைக் பிளேசர் (Bike Blazer), நிறுவனர் கேஷவ் ராய் இன்று ஆண்டுக்கு ரூ.1.3 கோடி வருமானம் ஈட்டும் தொழிலதிபராக வளர்ந்து நிற்கிறார். ஆனால் அவர் தனது நிறுவனத்தை தெருவில் தான் பார்த்த காட்சியின் வாயிலாக துவங்கினார் என்பது தான் இதில் ஆச்சரியமான செய்தி. அவரின் வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பைக் துடைத்தவரை பார்த்தவருக்கு கிடைத்த ஐடியா- ரூ.1.3 கோடி ஆண்டு வருமானம் – பைக் பிளேஸர் நிறுவனர் கேசவ் ராய் வெற்றி பயணம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Jul 2025 22:47 PM IST

இந்தியாவில் (India) சாதாரண குடும்பத்தில் பிறந்த பலருக்கும் தொழில் துவங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கான வாய்ப்புகள் நம் கண் முன்னே இருந்தாலும், பயமும், தயக்கமும் நம்மை தடுக்கும். அந்த வகையில் வெற்றிக்கான வாய்ப்பும், ஐடியாவும்  எப்போது எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கும், அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு கேசவ் ராயின் வாழ்க்கை மிகப்பெரும் உதாரணம் பைக் ஓட்டுநர்களுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பான கவர் தயாரிக்கும் நிறுவனமான பைக் பிளேஸர் (Bike Blazer) நிறுவனத்தின் நிறுவனர் கேஷவ் ராய், தனது 27வது வயதில் ஒரு சாதாரண மாணவராக இருந்து இன்று 1.3 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள ஒரு தொழிலதிபராக வளர்ந்துள்ளார்.

பள்ளி பருவத்தில் படிப்பில் அதிகம் ஈடுபாடில்லாமல் இருந்த கேஷவ், கிரியேட்டிவான விஷயங்களில் சாதனைகளை செய்யும் ஆர்வத்தால் எஞ்சினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு செயலி அடிப்படையிலான தொழிலை துவங்க அவரது தந்தையிடம் முதலீடுக்கு பணம் கேட்கிறார். ஆனால் அவர் மறுக்கவே அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இதையும் படிக்க : ஒரு ஸ்மார்ட் ஐடியா.. ரூ.50,000 முதலீடு…குடும்ப தொழிலை ரூ.340 கோடி நிறுவனமாக மாற்றிய இளைஞர்!

பைக் துடைப்பவரிடம் இருந்து தோன்றிய ஐடியா

அதையடுத்து, நான்கு நாட்கள் வெளியூர் செல்வதாக சொல்லி விட்டு, வீட்டைவிட்டு வெளியேறிய அவர், டெல்லியை சுற்றி வருகிறார். ஆனால் அவருக்கு வாழ்க்கையில் என்ன செய்வது என்ற எண்ணம் வரவே இல்லை. இந்த நிலையில் சரியாக 4வது நாள்,  டெல்லி மெட்ரோ நிலையம் ஒன்றின் பார்கிங் பகுதியில் ஒருவர் பைக் துடைக்க துணியை தேடுகிறார். பின்னர் மற்றொரு பைக்கிலிருந்து எடுத்துச் சென்று பைக்கை துடைக்க்கிறார். இதனை பார்த்த கேசவிற்கு ஒரு புதுமையான யோசனை தோன்றுகிறது.

இதையும் படிக்க : சுனாமியில் மக்களை காப்பாற்றியவர்.. இன்று 1000 கோடி மதிப்பிலான நிறுவனத்துக்கு அதிபதி – யார் இந்த விஜய் அரிசெட்டி!

ரூ.1.3 கோடி ஆண்டு வருமானம்

இதனையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு பைக் பிளேஸர் நிறுவனத்தை துவக்குகிறார். பைக் பிளேஸர் என்பது ஒரு வாட்டர் புரூஃப், காற்றுப் புகாத, கம்பியோடு கூடிய பாதுகாப்புக் கவர், இது வெறும் 30 விநாடிகளில் உங்கள் பைக்கை முழுமையாக மூடிவிடும். மழை, தூசி, சூரிய வெப்பம் போன்றவற்றில் இருந்து பைக்கை பாதுகாக்க இது மிகச்சிறந்த தீர்வாகும்.இந்த கவர் 30 விநாடிகளில் வாகனத்தை முழுவதுமாக மூடி பாதுகாக்கிறது. தற்போது இந்த தயாரிப்பு பெரும் வரவேற்பை பெற்று, கேசவ் ராய்க்கு ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக உருவாக வாய்ப்பை அளித்துள்ளது. இந்த நிறுவனம் மூலம் கேசவ் ராய் ஆண்டுக்கு ரூ.1.3 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைக்கிறது. நம் கண்முன்னே எத்தனையோ வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அவற்றை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு கேசவ் ராயின் வாழ்க்கை மிகச்சிறந்த முன்னுதாரணம்.