இன்று பல கோடி மதிப்புடைய தொழிலதிபராக விளங்கும் விகேஷ் ஷா, தனது வாழ்க்கையை மிகவும் சிரமமான சூழ்நிலைகளில் தொடங்கினார். விகேஷ் சிறு வயதிலேயே குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் விட்டு கூலி வேலை பார்க்கத் தொடங்கினார். அவரது அப்பா ஷேர் மார்க்கெட்டில் (Share Market) ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரது குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. அப்போது பத்தாம் வகுப்பு படித்து வந்த விகேஷ், தனது படிப்பை பாதியில் விட்டுவிட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
ஒரு தொழில் துவங்கி வாழ்வில் முன்னேற வேண்டும் இந்தியாவில் (India) பலருக்கும் இருக்கும் கனவு. ஆனால் பொருளாதார நிலை, குடும்ப சூழல் ஆகியவை அதற்கு தடையாக இருக்கும். ஆனால் இத்தகைய தடையைத் தாண்டி பலர் வெற்றி பெற்றிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் விகேஷ் ஷா. இவர் இந்தியாவின் பிரபல பேக்கரியான (Bakery) 99 பேன்கேக்ஸின் (99 Pancakes) தலைவர். ஆனால் அவர் இந்த நிலையை அவர் அவ்வளவு எளிதில் அடைந்துவிடவில்லை. விகேஷ் ஷாவின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. ஆனால் தன் வழியில் வந்த தடைகற்களை படிக்கற்களாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார். அவரது வெற்றிக்கதையை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க : ஒரு ஸ்மார்ட் ஐடியா.. ரூ.50,000 முதலீடு…குடும்ப தொழிலை ரூ.340 கோடி நிறுவனமாக மாற்றிய இளைஞர்!




பேக்கரி கடையில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். அந்த வேலையில் இவருக்கு மாதம் ரூ.700 மட்டுமே சம்பளம் கிடைத்தது. இதனால் பல நாள் இரவு உணவுக்கு காசில்லாமல் பேக்கரியில் கிடைக்கும் பன்னை தின்று பசியை போக்கியிருக்கிறார். ஆனால் இதுபோன்ற சவால்கள் அவரை முடக்கிவிடவில்லை. மாறாக முன்னேறத் தூண்டியது. பேக்கரி தொழிலை நன்றாக கற்றுக்கொண்டார்.
தொழிலில் முதல் முயற்சி
கடந்த 1998ஆம் ஆண்டில், விகேஷ் தனது வேலைக்கு ராஜினாமா செய்தார். அடுத்த ஒரு மாத காலம் வெறும் பன்னை மட்டுமே தின்று உயிர்வாழ்ந்தார். அந்த ஒரு வருடம் மிக கடுமையாக சென்றது. இந்த நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு நண்பர் ஒருவரின் உதவியில் பேக் பாயிண்ட் (Bake Point) எனும் பேக்கரி தொழிலைத் துவங்கினார். இதன் மூலம் மும்பையின் சில நிறுவனங்குக்கு இனிப்பு வகைகள் போன்றவற்றை சப்ளை செய்தார். இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு, தனது முதல் கேக் கடையை ‘Happiness Daily’ என்ற பெயரில் திறந்தார். இது குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க : சைக்கிளில் ஸ்நாக்ஸ் விற்றவர்.. இன்று ரூ.5,000 கோடி நிறுவனத்தின் தலைவர் – எப்படி நடந்தது இந்த மேஜிக்?
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம், நெதர்லாந்தில் உள்ள அம்ஸ்டர்டாம் பயணத்தின் போது ஒருவர் தெருவில் பான்கேக் தயாரிப்பதை பார்த்தார். அவருக்கு புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வந்தது. இதன் அடிப்படையில், ரூ.9 லட்சம் முதலீட்டில் ’99 Pancakes’ நிறுவினார். இன்று இந்த நிறுவனம் 10 நகரங்களில், 5 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.13.5 கோடி வருமானம் ஈட்டும் இந்த பிராண்டு, இந்தியாவில் வெற்றிகரமான பேக்கரி நிறுவனமாக வளர்ந்துள்ளது.