மூட நம்பிக்கையின் உச்சம்.. பேரனை நரபலி கொடுத்த தாத்தா.. பகீர் வாக்குமூலம்!
Uttar Pradesh Murder : உத்தர பிரதேசத்தில் தனது பேரனை, தாத்தா நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக, மந்திரவாதியின் பேச்சு கேட்டு, தனது பேரனை நரபலி கொடுத்துள்ளார். அதோடு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியிருப்பது தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேசம், ஆகஸ்ட் 31 : உத்தர பிரதேச மாநிலத்தில் 11ஆம் வகுப்பு படித்து வந்த தன்னுடைய பேரனை தாத்தா நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்னைக்கு பரிகாரம் செய்வரதாக நினைத்து மந்திரவாதியின் பேச்சை கேட்டு, 11ஆம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் பியூஷ் (17). இவர் பிரயாக்ராஜில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றிருக்கிறார். பள்ளிக்கு சென்ற அவர், இரவு 7 மணி வரை வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் உடனே தனது மகன் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின்பேரில், போலீசார் 11ஆம் வகுப்பு மாணவை தேடி வந்தனர். அப்போது, கால்வாயில் துண்டிக்கப்பட்ட தலை, உடல் பாகங்கள் போன்றவை கிடைப்பதாக உள்ளூர் மக்கள் தகவல் கொடுத்தனர். அப்போது, அந்த உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது, பியூஷ் உடல் என தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேறகொண்டனர். இதற்கிடையில், மாணவர் பியூஷை, அவரது தாத்தை சரண் சிங் அழைத்து சென்றது தெரியவந்தது.




Also Read : பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 9 ஆம் வகுப்பு சிறுமி.. 28 வயது இளைஞரை வலைவீசி தேடும் போலீஸ்!
பேரனை நரபலி கொடுத்த தாத்தா
எனவே, சரண் சிங்கை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சியூட்டும் தகவ்லகள் வெளியாகின. அதாவது, சரண் சிங் (58) குடும்பத்தில் நீண்ட நாட்களாக பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால், மந்திரவாதியிடம் சென்ற, தன்னுடைய குடும்ப பிரச்னை குறித்து கூறியுள்ளார்.
மேலும், பிரச்னை சரி செய்வதற்கு பரிகாரத்தை அவர் கேட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு அந்த மந்திரவாதியும், குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனை நரபலி கொடுத்தால் பிரச்னை சரியாகும் என கூறியுள்ளார். இதனை கேட்ட சரண் சிங், பேரன் பியூஷ்வை நரபலி கொடுக்க முடிவு செய்தார்.
Also Read : வரதட்சணை கொடுமை.. ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை.. நடந்தது என்ன?
அப்போது, தான் பள்ளிக்கு சென்ற சிறுவனை ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அவர் வீட்டிற்கு அழைத்து நரபலி கொடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசயதாகவும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து, அவரை போலீசார் சரண் சிங்கை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் மேலும் 5 சிறுவர்களை நரபலி கொடுக்க திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.