சிறுவன் அடித்து கொலை.. பிணத்துடன் 2 நாள் இருந்த குழந்தை… தந்தை செய்த கொடூர செயல்!
Kanyakumari Murder : கன்னியாகுமரியில் 5 வயது சிறுவனை தந்தை அடித்து கொலை செய்துள்ளார். கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் ஐந்து வயது சிறுவனை தந்தை அடித்து கொலை செய்துள்ளார். மேலும், பிணத்துடன் ஒன்றரை வயது குழந்தையும் இரண்டு நாட்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி, செப்டம்பர் 03 : கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் மகனையே தந்தை அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சிகிராமம் பகுதியைச் சேர்ந்வதர் செல்வமதன் (36). இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது முதல் மனைவி சில ஆண்டுகளாக பிரிந்து சென்ற நிலையில், அதே பகுதியைச் சேர்ந்வதர் செல்வி (31) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். செல்விக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். செல்விக்கு 5 வயதில் அபிநவ் என்ற மகன் இருந்துள்ளார்.
மேலும், செல்வமதன் மற்றும் செல்விக்கும் ஒன்றரை வயதில் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில், இரண்டு நாட்காளக செல்வமதன் வீடு மூடி கிடந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில், சிறுவன் அபிநவ் இருந்துள்ளார்.
Also Read : பாஜக நிர்வாகி அடித்து கொலை.. இரவில் நடந்த சம்பவம்.. சிவகங்கையில் அதிர்ச்சி




சிறுவனை அடித்து கொன்ற தந்தை
மேலும், அவரது சடலத்திற்கு அருகே ஒன்றரை வயது குழந்தை மயக்க நிலையில் இருந்துள்ளது. உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதோடு, 5 வயது சிறுவன் அபிநவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையின்போது, செல்வமதன் மற்றும் செல்விக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், செல்வி வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். இதனால், செல்வமதன், தனது மனைவி செல்வி காணாமல் போனதாக புகார் அளித்திருந்தார். இதனால் செல்வியை போலீசாரும் தேடி வந்தனர்.
இதற்கிடையில், செல்வி வீடு திரும்பாததால் ஆத்திரம் அடைந்த செல்வமதன், தனது 5 வயது சிறுவன் அபிநவ்வை அடித்தே கொலை செய்து இருக்கிறார். அபிநவை கொலை செய்துவிட்டு, ஒன்றரை வயது குழந்தை வீட்டிற்குள் வைத்து பூட்டி சென்று இருக்கிறார். இதனால், துர்நாற்றம் வீசியதை அடுத்து, இரண்டு நாட்கள் முன்பு நடந்த கொலை என்பது தெரியவந்துள்ளது.
Also Read : வரதட்சணை கொடுமை.. ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை.. நடந்தது என்ன?
இதனால், அந்த குழந்தை இரண்டு நாட்கள் பிணத்துடன் இருந்துள்ளது. மேலும், பசியால் அலறி துடித்தும் இருக்கிறது. பசியால் வாடிய குழந்தை, இறுதியில் மயங்கி விழுந்துள்ளது. தற்போது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. செல்வமதனை போலீசார் தேடி வருகின்றனர்.