Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உடலில் அரிப்பு, வீக்கம்.. பறிபோன இளம்பெண் உயிர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Chennai Crime News : சென்னையில் விஷப் பூச்சி கடித்து இளம்பெண் உயிரிழந்துள்ளார். உடலில் அரிப்பு, வீக்கம் ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளி இளம்பெண் துடிதுடித்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலில் அரிப்பு, வீக்கம்.. பறிபோன இளம்பெண் உயிர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
உயிரிழந்த பெண்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Sep 2025 11:10 AM

சென்னை, செப்டம்பர் 01 : சென்னையில் விஷப்பூச்சி கடித்து 19 வயதான இளம்பெண் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென வாயில் நுரை தள்ளி, இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை அடுத்த ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (47). இவர் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவ்ர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாடகை வீட்டில் ஆவடியில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சர்மிளா. வயது 19. இவர் அதே பகுதியில் கல்லூரியில் படித்து வந்தார். 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி இளம்பெண் சர்மிளா தூங்கி எழுந்ததும், காலையில் அவரது உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டதால், அவர் சொரிந்து கொண்டே இருந்திருக்கிறார்.

இதனால், அவரது உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அரிப்பு தாங்க முடியாமல் சர்மிளா, மஞ்சள் பூசிக் கொண்டு குளிக்க முடிவு செய்து குளியலறைக்கு சென்றிருக்கிறார். அப்போது, திடீரென அவரது வாயில் நுரை தள்ளி அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சர்மிளாவை உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவேற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Also Read : 150 சவரன் கேட்டு சித்ரவதை… வரதட்சணை கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு.. மதுரையில் அதிர்ச்சி

விஷப் பூச்சி கடித்து இளம்பெண் உயிரிழப்பு

அங்கு சிகிச்சை அளித்தும் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், பெற்றோர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், சர்மிளா சிகிச்சை பலனின்றி 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று உயிரிழந்துள்ளார். இது அவரது பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சர்மிளாவை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சர்மிளாவின் மரணம் குறித்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின்போது, சர்மிளாக விஷப் பூச்சி கடித்ததாகவும், இதனால், அவரது உடலில் அரிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

Also Read : பெற்றோர்களே உஷார்.. குளிர்பானம் குடித்த சிறுவன்.. வாயில் நுரை தள்ளி உயிரிழப்பு!

இருப்பினும், முழு பிரேத பரிசோதனைக்கு பிறகே, இளம்பெண் சர்மிளாவின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். விஷப் பூச்சி கடித்து இளம்பெண் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில்  13 வயது சிறுவன் விஷப் பூச்சி கடித்து உயிரிழந்துள்ளார். அருங்கம்புல் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற நிலையில், அங்கு விஷப் பூச்சி கடித்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.