Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தோழியின் திருமணத்திற்கு வர மறுத்த கணவன்.. மன உளைச்சலில் தூக்கில் தொங்கிய மனைவி!

Wife Killed Herself in Clash with Husband | சென்னையில் தோழியின் திருமணத்திற்கு வர கணவன் மறுப்பு தெரிவித்த நிலையில் மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். திருமணமாகி மூன்று மாதங்களே ஆகும் நிலையில், புதுமண பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோழியின் திருமணத்திற்கு வர மறுத்த கணவன்.. மன உளைச்சலில் தூக்கில் தொங்கிய மனைவி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Sep 2025 08:14 AM

சென்னை, செப்டம்பர் 01 : சென்னையில் (Chennai) தோழியின் திருமணத்திற்கு வர கணவன் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான மூன்றே மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், அது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவன் தோழியின் திருமணத்திற்கு வராததால் தான் இளம் பெண் தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் தோழியின் திருமணத்திற்கு வராததால் மனமுடைந்த இளம் பெண்

சென்னை வலசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 26). இவரது மனைவி சவுந்தர்யா (வயது 24). இவர்கள் இருவருக்கும் 2025, ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில், மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாக வாந்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 30, 2025 அன்று தனது தோழியின் திருமணத்திற்கு செல்வதற்காக கோகுலை, சவுந்தர்யா அழைத்துள்ளார். ஆனால், அதற்கு கோகுல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பெற்றோர்களே உஷார்.. குளிர்பானம் குடித்த சிறுவன்.. வாயில் நுரை தள்ளி உயிரிழப்பு!

தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட புதுப்பெண்

திருமணத்திற்கு வரவில்லை என கோகுல் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சவுந்தர்யா, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர், அது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : வைகை ஆற்றில் கிடந்த மனுக்கள்.. தாசில்தார் இடமாற்றம்.. போலீஸ் வழக்குப்பதிவு!

திருமணமான மூன்றே மாதங்களில் இளம் பெண் தற்கொலை செய்துக்கொண்டது கணவன் – மனைவி தகராறு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
தற்கொலை எண்ணங்கள் வந்தால், நீங்கள் தனியாக இல்லை. மன அழுத்தம், நெருக்கடியான சூழ்நிலை, தவிர்க்க முடியாத அனுபவங்கள் போன்றவை யாரையும் தற்கொலை எண்ணத்துக்கு இட்டுச் செல்லலாம். ஆனால், இதற்கான தீர்வுகள் இருக்கின்றன. தயங்காமல் உதவியை தேடுங்கள்.

மனநல ஹெல்ப்லைன் எண்கள்
தன்னம்பிக்கை – 104 (தமிழ்நாடு அரசின் மனநலம் ஆலோசனை சேவை)

Sneha Foundation – 044 2464 0050 / 044 2464 0060 (24 மணி நேரம், தமிழிலும் செயல்படுகிறது)

iCall (TISS) – +91 9152987821 (WhatsApp வழியாகவும் கிடைக்கும்)