Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ramanathapuram: ராமநாதபுரத்தில் 2 மாதத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் அமல் – இதுதான் காரணம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை கொண்டாட்டங்களின் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளி மாவட்ட வாகனங்களுக்கு தடைஉள்ளிட்ட 23 நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக அமைதி மற்றும் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Ramanathapuram: ராமநாதபுரத்தில் 2 மாதத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் அமல் – இதுதான் காரணம்!
முத்துராமலிங்க தேவர் - இம்மானுவேல் சேகரன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 04 Sep 2025 08:04 AM

ராமநாதபுரம், செப்டம்பர் 4:  இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை ஆகிய நிகழ்வுகள் காரணமாக ராமநாதபுரத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங்க் காலோன் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இவரது நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ளது. அதேபோல் சுதந்திரப் போராட்டத் தியாகி, அரசியல்வாதி, ஆன்மீகவாதி என பல சிறப்புகளைக் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினம் அக்டோபர் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இவரது நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் அமைந்துள்ளது இந்த இரு நிகழ்வுகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் இருந்து இருவரின் சமூகம் சார்ந்த மக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வது வழக்கம்.

கடும் கட்டுப்பாடுகள் அமல் 

இப்படியான நிலையில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகிய நிகழ்வுகளுக்கு அஞ்சலி செலுத்த வருவோர் பின்பற்ற வேண்டிய 23 நிபந்தனைகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். மேலும் பிற மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் வருபவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்கதமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் UPI.. விரைவில் மாநிலம் முழுவதும் அமல்!

மேலும் அனுமதிக்கப்பட்ட வழித்தடம் வழியாக மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும். அதே சமயம் வாகனத்தில் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்வது, ஆயுதங்கள் கொண்டு வருவது, பட்டாசு வெடிப்பது, ஒலிபெருக்கி பயன்படுத்துவது என அனைத்தும் தடை செய்யப்படுகிறது.  அதுமட்டுமல்லாமல் வாகனங்களில் ஜாதி மற்றும் மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் கொண்ட பேனர்கள் இடம்பெறக்கூடாது.

அது தொடர்பான முழக்கங்களை எழுப்பக் கூடாது. பேருந்துகளில் அழைத்துச் செல்லும்போது பயணிகள் படிக்கட்டிலும் மேற்கூறையிலும் பயணிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் அரசியல் தலைவர்கள் வரும்போது அவர்களுடன் அதிகபட்சம் மூன்று சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இனி ஈஸியா போகலாம்.. பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மேலும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரையும், அக்டோபர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரையும், வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்டோ, வாடகை வாகனங்கள், சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள், டிராக்டர் ஆகியவை நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரை தடை விதிக்கப்படுகிறது.  ஜோதி எடுத்து வருபவர்கள் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியில் ஒரு கிலோமீட்டருக்குள் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று எடுத்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.