தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் UPI.. விரைவில் மாநிலம் முழுவதும் அமல்!
Tamil Nadu Ration Shops Go Digital | தமிழகத்தில் மொத்தம் சுமார் 37,328 ரேஷன் கடைகள் உள்ள நிலையில், அவற்றில் சில ரேஷன் கடைகளில் யுபிஐ சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டுக்குள்ளாக அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ சேவை அமலுக்கு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான குடும்ப அட்டை (Ration Card) தாரர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வரும் நிலையில், ரேஷன் கடைகள் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அடுத்த ஒரு வருடத்திற்குள் யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவை பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. தற்போது வெறும் 10,661 ரேஷன் கடைகளில் மட்டுமே யுபிஐ சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில், வரும் காலத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பொதுமக்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக விளங்கும் ரேஷன் கடைகள்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் வருமை கோட்டின் கீழே உள்ள பொதுமக்களுக்கு மானிய விலையில் அரசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுமக்கள் தங்களது உணவு தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடிகிறது. ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அளவிலான பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வாங்கிக்கொள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : 45 நாட்களில் நடவடிக்கை.. மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய தகவல் சொன்ன அமைச்சர்!




அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ – அடுத்த ஓராண்டுக்குள் நிறைவேற்றம்
மாதம் மாதம் ரேஷன் கடையில் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பொதுமக்கள் பணம் செலுத்தி தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பொருட்களை வாங்கி வருகின்றனர். முன்னதாக ரேஷன் கடைகளில் அட்டை பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஸ்மார்ட் கார்டு முறை அமலில் உள்ளது. அதாவது ஸ்மார்ட் கார்டை ஸ்வைப் செய்வதன் மூலமும், கைரேகை பதிவு செய்வதன் மூலம் மிக எளிதாக பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க : மகளிர் உரிமைத் தொகை முதல் ரேஷன் கார்டு வரை.. அனைத்து சேவைகளும் கிடைக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!
இவ்வாறு ரேஷன் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்கும் நிலை உள்ள நிலையில், விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் சுமார் 37,328 ரேஷன் கடைகள் உள்ள நிலையில் வெறும் 10,661 ரேஷன் கடைகளில் மட்டுமே யுபிஐ சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் அடுத்த ஓராண்டுக்குள்ளாக அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.