Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

EPFO : பிஎஃப் வட்டியை வரவு வைக்கும் இபிஎஃப்ஓ.. சுலபமாக தெரிந்துக்கொள்வது எப்படி?

How to Check EPF Interest Credit Online | உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பிஎஃப் கணக்கில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வட்டி தொகையை செலுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வட்டியை இபிஎஃப்ஓ உறுப்பினர்களின் வங்கி கணக்கில் செலுத்தி வரும் நிலையில், வட்டி வந்துவிட்டதா என்பது குறித்து தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : பிஎஃப் வட்டியை வரவு வைக்கும் இபிஎஃப்ஓ.. சுலபமாக தெரிந்துக்கொள்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 Jul 2025 11:29 AM

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பெயர்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் (EPFO – Employee Provident Fund Organization) கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இவ்வாறு பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் மாதம் மாதம் வரவு வைக்கப்படும் பணத்திற்கு அரசு வட்டியும் வழங்கும். பிஎஃப் வட்டி ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் நிலையில், இந்த ஆண்டுக்கான வட்டி குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இன்னும் சில நாட்களில் உறுப்பினர்களின் வங்கி கணக்கில் பிஎஃப் வட்டி வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்கூட்டியே வட்டியை வரவு வைக்கும் பணியை இபிஎஃப்ஓ தொடங்கியுள்ளது. அதன்படி, 96.51 சதவீத உறுப்பினர்களுக்கு ஏற்கனவே பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து கூறியுள்ள மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 2024 – 25 ஆம் நிதியாண்டுக்கான 8.25 சதவீத வட்டியை இந்த வாரத்திற்குள் உறுப்பினர்களின் வங்கி கணக்கில் இபிஎஃப்ஓ முழுமையாக வரவு வைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் பிஎஃப் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை மிக எளிமையாக தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : EPFO: உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி சேர்க்கப்படவில்லையா? இந்த காரணமாக இருக்கலாம்!

உமாங் செயலி

  1. முதலில் அரசின் உமாங் (UMANG) செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  2. அதில் மொபைல் எண் மற்றும் ஓடிபியை உள்ளிட்டு உள் நுழைய வேண்டும்.
  3. பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள இபிஎஃப்ஓ View Passbook என்ற அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  4. அதில், உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது, வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.

இபிஎஃப்ஓ இணையதளம்

  1. முதலில் epfindia.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் Services என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பிறகு For Employees என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  4. அதில் கொடுக்கப்பட்டுள்ள Member Passbook என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  5. பிறகு அதில் யுஏஎன் (UAN – Universal Account Number) எண் மற்றும் கடவுச்சொல்லை (Password) உள்ளிட்டு உள்நுழை வேண்டும்.
  6. அதில் உங்களது கணக்கு விவரங்கள் மற்றும் வட்டி வந்துவிட்டதா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த அம்சங்களை பயன்படுத்தி மிக எளிதாக பிஎஃப் வட்டியை தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.