Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

EPFO : PF பயனர்களுக்கு குட் நியூஸ்.. வீடு வாங்குவதற்கு, கட்டுவதற்கு பணம் எடுப்பதற்கான விதிகளில் அதிரடி மாற்றம்!

EPFO New Rule | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஏற்கனவே உறுப்பினர்களுக்கு பல சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது வீடு வாங்குவதல், கட்டுதல் மற்றும் வீட்டுக்கான மாத தவணை செலுத்துவதற்கான விதிகளில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : PF பயனர்களுக்கு குட் நியூஸ்.. வீடு வாங்குவதற்கு, கட்டுவதற்கு பணம் எடுப்பதற்கான விதிகளில் அதிரடி மாற்றம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jul 2025 11:24 AM

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள அம்சம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இதில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்திற்கு அரசு வட்டியும் வழங்கும். ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் மாதம் மாதம் வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

திருமணம், மருத்துவம், வீடு கட்டுதல் மற்றும் வீடு வாங்குதல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில காரணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. வீடு வாங்குவதற்கு மற்றும் கட்டுவதற்கு பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படும் நிலையில், அதில் மேலும் ஒரு அட்டகாசமான தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அது ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது. அது என்ன தளர்வு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப்ஓவில் வந்த அதிரடி மாற்றம்

இபிஎஃப் திட்டத்தில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 68-BD-ன் படி, வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு, வாங்கி வீட்டுக்கான மாத தவணை செலுத்துவது உள்ளிட்ட தேவைகளுக்காக பிஎஃப் (PF – Provident Fund) பணத்தில் இருந்து 90 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த 90 சதவீதம் பணத்தை எடுத்துக்கொள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அனுமதி வழங்குகிறது. இபிஎஃப்ஓவின் இந்த தளர்வு மிகுந்த பயனளிக்கும் விதமாக உள்ள நிலையில், ஊழியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் அமல்!

முந்தைய விதிகள் கூறுவது என்ன?

வீடு வாங்குவது, வீடு கட்டுவது, வீட்டுக்கான மாத தவணை செலுத்துவது ஆகியவற்றுக்காக பணம் எடுப்பதற்கு முன்னர் கடுமையான விதிகள் பின்பற்றப்பட்டன. ஆனால், தற்போது அவை பெரும் அளவில் தளர்த்தப்பட்டுள்ளன.

  • முன்னதாக, வீடு வாங்குவது, வீடு கட்டுவது, வீட்டுக்கான மாத தவணை செலுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்கு 36 மாதத்திற்கான பிஎஃப் தொகையை மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
  • அவ்வாறு 36 மாத பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ஊழியர்கள்  பிஎஃக் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற விதியும் இருந்தது.
  • அதுமட்டுமன்றி, ஏற்கனவே வீடு தொடர்பான திட்டங்களில் பயன்பெறும் நபர்களுக்கு பிஎஃப் பணத்தை பெற அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது மேற்குறிப்பிட்ட இந்த அனைத்து விதிகளும் ஊழியர்களுக்கு ஏதுவாக மிக சுலபமானதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.