EPFO: பிஎஃப் கணக்கில் 8.25% வட்டி வரவு – உங்களுக்கு கிரெடிட் ஆகிவிட்டதா?
EPFO Interest Update : கடந்த 2024–25 நிதியாண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPF0) வட்டி தொகையை பிஎஃப் கணக்குகளில் வரவு வைக்க தொடங்கியுள்ளது. பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பணியாளர் வருங்கால வைப்பு அமைப்பு நிதி (EPFO), பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து பெறப்படும் தொகைக்கான வட்டியை ஒவ்வொரு ஆண்டும் பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கிறது. பணியாளர்களிடம் இருந்து பெறப்படும் தொகைக்கு மாதந்தோறும் வட்டி கணக்கிடப்படும் என்றாலும் வருடம் ஒருமுறை மட்டுமே வட்டி பணியாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில் 2024–25 நிதியாண்டுக்கான 8.25 சதவீத வட்டியை உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு செய்வதைத் தொடங்கியுள்ளது. அதிகாரபூர்வமாக எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் (Email) அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், பலர் தங்களது பாஸ்புக்குகளில் (Passbook) வட்டி தொகை சேர்க்கப்பட்டதை கண்டுள்ளனர். அதனை எப்படி தெரிந்துகொள்வது என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நிதி அமைச்சகம் 8.25 வட்டி வழங்க ஒப்புதல்
இது தொடர்பாக கடந்த, 2025 பிப்ரவரியில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 8.25% வட்டி வீதத்தை பரிந்துரை செய்தது. பின்னர் நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் வழங்கியது. இது இந்தியா முழுவதும் உள்ள 8 கோடிக்கும் மேற்பட்ட பிஎஃப் கணக்குதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மற்ற முதலீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்களை ஒப்பிடுகையில் பிஎஃப் வட்டி விகிதம் ஓய்வூதிய சேமிப்புக்கு ஒரு நிலையான, வரிவிலக்கு உடைய சேமிப்பாக பார்க்கப்படுகிறது.
இபிஎஃப்ஓ மாதந்தோறும் வட்டி கணக்கிடப்படுகிறது. ஆனால், நிதியாண்டு முடிவிற்குப் பின்பு, மொத்தமாக தொகையாக வட்டி கணக்கில் வரவு செய்யப்படுகிறது. பொதுவாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இது பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். இது பணியாளர் மற்றும் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும். ஓய்வூதிய திட்டத்துக்கு பெறப்படும் தொகைக்கு வட்டி கிடையாது.
பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டதா? எப்படி தெரிந்துகொள்வது?
1.EPFO இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள
- www.epfindia.gov.in என்ற இணைய முகவரிக்கு செல்லவும்
- அங்கு For Employees > Member Passbook என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் UAN, கடவுச்சொல், காப்ட்சா மூலம் உள்நுழையவும்
- அதில் உங்கள் வட்டி சேர்க்கப்பட்டிருக்கிறதா என தெரிந்துகொள்ளலாம்.
2. யுமாங் செயலி:
- யுமாங் (UMANG) செயலியை திறந்து அதில் EPFO என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்து Employee Centric Services என்ற பிரிவில் View Passbook என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- UAN மற்றும் OTP பயன்படுத்தி பார்க்கலாம்.
எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ள
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து EPFO UAN என டைப் செய்து, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
Missed Call மூலம் தெரிந்து கொள்ள
011-22901406 என்ற எண்ணிற்கு பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து மிஸ்ட் கால்கொடுக்கவும்